உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்!

Share this News:

சைடோமிர் (02 மார்ச் 2022): உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷியப் படைகள் தாக்கியதில் இருவர் பலி யாகியுள்ளனர். மேலும் 16 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகின்றது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்குகின்றனர்.

இந்நிலையில், சைடோமிர் நகரிலுள்ள மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 10 கட்டடங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், மருத்துவமனையிலிருந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாக அவசரகால மையம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply