உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்!

சைடோமிர் (02 மார்ச் 2022): உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷியப் படைகள் தாக்கியதில் இருவர் பலி யாகியுள்ளனர். மேலும் 16 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகின்றது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை…

மேலும்...

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளாக மாறிய மசூதிகள்!

வதோதரா (21 ஏப் 2021); இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மசூதிகள் மருத்துவமனைகளாக மாறியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால் குஜராத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநில மசூதிகள் மருத்துவமமனைகளாக செயல்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள மசூதியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை…

மேலும்...

மருத்துவமனைகளின் அலட்சியம் – சாதாரண நோயாளிகளும் பலியாகும் பரிதாபம்!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 26,273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 671 உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,53,751 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 17,994 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இப்படியிருக்க அரசின் உத்தரவால் பெரும்பாலான கொரோனா…

மேலும்...

சென்னை குறித்து அதிர்ச்சித் தகவல் – பிரபல பத்திரிகையாளரின் பதற வைக்கும் பேட்டி!

சென்னை (08 ஜூன் 2020): சென்னையில் பரவும் கொரோனா குறித்தும், வெளியில் சுற்றாதீர்கள், மருத்துவமனைகளில் உரிய படுக்கைகள் இல்லை என்று கண்ணீர் உடன் பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை எனக்கும், என் தம்பிக்கும்…

மேலும்...

காசு இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை – தனியார் மருத்துவமனையின் அத்துமீறல்!

போபால் (08 ஜூன் 2020): கையில் பணம் குறைவாக இருந்ததால் சிகிச்சைக்கு வந்த முதியவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஷாஜாபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 80 வயதான லக்ஷ்மி நாராயண், வயிற்று வலி காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் அவரது குடும்பம் பணம் செலுத்தியது ஆனால் டிஸ்சார்ஜ் ஆகும் போது மருத்துவமனை சார்பில் ரூ.11,270 கூடுதலாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முதியவரின் குடும்பம்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – மருத்துவமனைக்கு சீல்!

அலகாபாத் (09 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில், கணவர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியின் மருத்துவமனைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். டாக்டர் மாதவி என்பவர் ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவமனை வைத்துள்ளார். இவரது கணவர் ஆஷிஷ், அகில இந்திய கிஷான் மஜூர் சபாவின் செயலாளராக உள்ளார். இவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதனை அடுத்து அவரது மனைவியின் மருத்துவமனைக்கு ஞாயிறன்று சோதனை என்ற பெயரில் சென்ற போலீசார், டாக்டர் மாதவியின்…

மேலும்...

நெஞ்சு வலி காரணமாக நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி (30 ஜன 2020): நெல்லை கண்ணன் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடநத பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் தினமும் காலையும், மாலையும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நெஞ்சுவலி, மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்...

வரலாற்று சாதனை – பிரதமர் மோடிக்கு எடப்பாடி நன்றி!

சென்னை (28 ஜன 2020): பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார். அரியலூர், கள்ளக்குறிச்சியில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரே நேரத்தில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. ஆண்டில் 11 புதிய…

மேலும்...