பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

Share this News:

இஸ்லாமாபாத் (04 ஏப் 2022): பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

பாகிஸ்தானில் நேற்று இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்தார்.

அதேவேளை இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று அங்கு அமைச்சரவை கலைக்கப்பட்டதால், புதிதாக விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதே சமயம் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக நீடிப்பார்.

நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை அந்நாட்டு துணை சபாநாயகர் நிராகரித்ததும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியால் இது தொடர்பாக விளக்கம் கேட்டார். அதோடு உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரிக்க முடிவு செய்தது. தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியால் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று இது தொடர்பான நோட்டீஸ்களை பல்வேறு தரப்பிற்கு அனுப்பியது.


Share this News:

Leave a Reply