முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

Share this News:

மாஸ்கோ (11 ஆக 2020): முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களுக்கு இடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்துள்ள நிலையில் இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும் அறிவித்துள்ள புதின், இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் கூறுகிறார்.

தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் பெரும் அளவில் இந்த தடுப்பு மருந்து விரைவில் உற்பத்தி செய்ய வேண்டும் என தான் விரும்புவதாக புதின் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply