கொரோனா வைரஸ் – இத்தாலியில் ஒரே நாளில் 250 பேர் மரணம்!

ரோம் (14 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலியில் 24 மணி நேரத்தில் 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவை அடுத்து இத்தாலியை அதிகம் தாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் இத்தாலியில் 250 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1266 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வெள்ளிக்கிழமை கணக்குப்படி கொரோனாவால் இத்தாலியில் 17660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply