பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை

Share this News:

இஸ்லாமாபாத் (01 ஜூலை 2020): அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பிறகு நடைபெற்ற விசாரணையில் ஏறத்தாழ 250 விமானிகள் மோசடி செய்து தேர்வில் வெற்றி பெற்று விமானிகளாக பணி செய்வதாக தெரியவந்தது

இந்த விமானிகளில் பலர் சர்வதேச விமானங்களை இயக்கி வருகின்ற அதிர்ச்சி தகவலும் வெளிப்பட்டடது. இதனையடுத்து வியட்னாம் அரசு பாகிஸ்தான் விமானிகளுக்கு தடை விதித்தது. தற்போது ஐரோப்பிய ஒன்றியமும், பாகிஸ்தான் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்க தடை விதித்துள்ளது.

1.7.2020 தொடங்கியுள்ள இந்த தடை 6 மாதங்களுக்கு இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வான் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


Share this News: