கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் 38 பேர் பலி!

Share this News:

அல்ஜீரியா (11 ஆக 2021): வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் காட்டுத் தீ கட்டுக்கட்டங்காமல் பரவி வருகிறது.

இதுவரை, காட்டுத்தீயில் வீரர்கள் உட்பட 38 பேர் இறந்துள்ளனர். இதுவரை 25 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் தீ பரவத் தொடங்கியது. தீயணைப்பு படை, சிவில் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் 14 மாகாணங்களில் 19 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் நாடு சந்தித்த மிகப்பெரிய தீ இதுவாகும்.

சமீபத்திய வாரங்களில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்த தீ விபத்தால் துருக்கியில் பெரும் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply