அதிமுக முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இல்லையாம் – அப்படின்னா யார்?

Share this News:

சென்னை (03 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக சசிகலாவை அறிவிக்க அதிமுக தயாராகிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் சசிகலா தலைமையை அதிமுக ஏற்க தயாராகிவிட்டதாகவும் தெரிகிறது.

சசிகலா தலைமையை அதிமுக மூத்த தலைவர்கள் ஏற்க தயாராகி விட்டதாகவும், வருகிற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளருக்கான அறிவிப்பு

அதிமுகவில் எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட குழப்பங்களுக்கு அடுத்து, அக்கட்சியின் நிரந்த பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. அதேபோல், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வர் பதவியை நோக்கியும் காய்களை நகர்த்தினார்.

இந்த சூழலில் தனது விடுதலைக்கான நாட்களை சசிகலா எண்ணிக் கொண்டிருக்கிறார். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பதிலளித்துள்ள நிலையில், அவரை அதற்கு முன்னதாகவே வெளியே கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவரது வருகைக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் இருக்கும் பெரும்பாலானோர் சசிகலாவினால் ஏதோ ஒரு வகையில் ஆதாயமடைந்தவர்களாகவே இருக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜெயலலிதாவின் பெயரில் வந்தாலும், அந்த பதவியை பெற்றவர்கள் சசிகலாவின் கண்பார்வை இல்லாமல் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது சாமனியன் வரை அறிந்த விஷயமே.

இந்த பிண்ணனியிலேயே கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நம் இருவரையும் முதல்வராக்கியது சசிகலாதான் என்று

எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடியை முதல்வராக்கியது சசிகலாதான் என்பதால் அந்த விசுவாசம் அவருக்கு இருக்கும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதேபோல், சசிகலாவின் தயவு இல்லாமல் ஜெயலலிதா இருந்த போது ஓபிஎஸ்-க்கும் முதல்வர் பதவி கிடைத்திருக்காது என்றும் அவர்கள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்.

மேலும், செயற்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாதான் இருப்பார் என்றும் போட்டுடைத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் சசிகலாவை ஏற்க தயாராகி விட்டனராம். இதன் காரணமாகவே வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தெரிகிறது. அதேபோல், சசிகலா தரப்பிலும் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட வேண்டியதில்லை. கட்சியை வளர்த்தெடுத்ததில் அவருக்கும் பங்குண்டு என்று சொல்லப்பட்டுள்ளதாம்.

எனவே, அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தான அறிவிப்பு வராது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எதிர்வரவுள்ள தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது. ஒருவேளை வெற்றி பெற்றால், இரண்டரை ஆண்டுகளுக்கு அவர் முதல்வராக இருப்பது என்றும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஓபிஎஸ் முதல்வராக இருப்பது என்றும் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. அத்துடன், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பது, அவரது ஆதரவாளார்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட விஷயங்கள்தான் தற்போது பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this News:

Leave a Reply