பாஜகவில் இணைந்த அதிமுக பிரபலம்!

புதுடெல்லி(10 ஜூன் 2023): அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மைத்ரேயன் இணைந்தார். அப்போது பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உடனிருந்தார்.

மேலும்...

அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் – ஆனால் ட்விஸ்ட் இருக்காமே!

ஈரோடு (01 பிப் 2023): அதிமுக இபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்போம். அவர்கள் வேட்பாளரை…

மேலும்...

எடப்பாடிக்கு துணிச்சல் வந்துவிட்டதா? – பின்பு பார்த்தால் வேறு கதை!

ஈரோடு (01 பிப் 2023): ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எடப்ப்பாடி அணியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என அதிமுக இபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். அதிமுக தேர்தல் பணிமனையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி…

மேலும்...

அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம் – திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் ஆதரவு?

சென்னை (23 ஜன 2023): தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம்…

மேலும்...

கொடுமையிலும் கொடுமை – திமுக மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

மதுரை (12 டிச 2022): மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்லூர் ராஜூ, சென்னை நகர மேயர் காரில் தொங்கிக் கொண்டு பயணித்ததால், திமுகவைக் கடுமையாகச் சாடியுள்ளார். “திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொங்கி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை! மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஓடி வந்து காரில் தொங்கி கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பவும் ஆட்சிக்கு வந்ததாக…

மேலும்...

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்ட அதிமுக பெண் நிர்வாகி!

சென்னை (12 டிச 2022): ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக எடப்பாடி அணியின் பெண் நிர்வாகி தமிழ்ச்செல்வி ராமசாமி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவி்ல் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்ற…

மேலும்...

திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்!

சென்னை (07 டிச 2022): அதிமுகவை சேர்ந்த கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, கோவையில் மாவட்டச் செயலாளராக இருந்த கோவை செல்வராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

மேலும்...

ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது – எடப்பாடி பழனிச்சாமி!

கோவை (02 டிச 2022): ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது என்று திமுகவை சாடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆளும் திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வைக் கண்டித்து, கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனியில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்…

மேலும்...

திமுக ஆதரவில் நடக்கிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (05 நவ 2022): ஒபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் எல்லாம் திமுகவின் ஆதரவில்தான் நடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இதற்கு முன் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். இதன் பின் மீண்டும் சசிகலா காலில் விழுந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்றார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவை தான் குற்றம் சொல்லுகிறது. அதேபோல ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டார். அதனால் தர்மயுத்தம் 2.0 என்பது ஒரு கர்ம யுத்தம்….

மேலும்...

ஓபிஎஸ் சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்த தேவர் சமூகம் கடிதம்!

சென்னை (30 ஜூலை 2022): தேவர் சமூகம் ஒன்று கூடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்திட வேண்டும் என தேவர் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். சுமார் 100 தேவர் அமைப்பினர் கைகோர்த்து ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரம்பரியமாக தேவர் சமூகம் ஆதரித்து வந்த அதிமுகவை சசிகலா அணியுடன் மீட்டெடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்ததே தேவர் சமுதாயம் என்றும், தலைவர்கள் ஒன்றிணைந்து, சிதைந்து போகாமல் கட்சியைக் கைப்பற்ற…

மேலும்...