மக்களின் வேதனையை பயன்படுத்தி காசு சம்பாதிக்கும் காய்கறி வியாபாரிகள்!

178

சென்னை (26 மார்ச் 2020): நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தில் உள்ள நேரத்தில் காய்கறிகளின் விலையை இரட்டிப்பாக்கி காசு பார்க்கின்றனர். காய்கறி வியாபாரிகள்.

கொரோனா கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மற்ற கறிகளை விட காய்கறிகளையே அதிகம் விரும்புகின்றனர்.

தேவை அதி­க­ரித்­ததை அடுத்து கோயம்­பேடு காய்­க­றிச் சந்­தை­யில் கத்­தி­ரிக்­காய், உருளை உள்­ளிட்ட காய்­க­றி­க­ளின் விலை அதி­க­ரித்­தது. கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்பு வரை கிலோ 30 ரூபாய்க்கு விற்ற காய்­க­றி­க­ளின் விலை, 60 முதல் 70 ரூபாய் என விற்கப்படுகிறது. இதே போல் பழங்­க­ளின் விலை­யும் கடு­மை­யாக அதி­க­ரித்­தது. இத­னால் பொது மக்­கள் திகைத்­துப் போயி­னர்.

இதைப் படிச்சீங்களா?:  முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது போலீசார் வழக்கு!

காய்கறிகளின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.