ஸ்பெயினில் ஒரே நாளில் பலரை பலி வாங்கிய கொரோனா – துணை பிரதமரையும் தாக்கியது!

174

ஸ்பெயின் (26 மார்ச் 2020): ஸ்பெயினில் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 656 பேர் பலியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதில், ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 656 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஸ்பெயினில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3647 ஆக உயர்ந்துள்ளது. இது சீனாவைக் காட்டிலும் அதிகமாகும்.

இதைப் படிச்சீங்களா?:  கொரோனாவுக்கு தமிழகத்தில் மூன்றாவது பலி!

அதுமட்டுமல்லாமல் ஸ்பெயின் துணை பிரதமர் கால்வோவுக்கும் கொரோனா பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது.