மானம் இழந்தவர்கள்தான் கட்சி நிர்வாகியாக இருக்க முடியும் – டி ஆர்.பாலு பரபரப்பு கருத்து!

Share this News:

காஞ்சிபுரம் (13 பிப் 2022): மானம், ஈனம், சுய மரியாதை எல்லாம் இழந்துட்டு வந்தாதான் கட்சியில் நிர்வாகியா இருக்க முடியும். என்று தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டி.ஆர்.பாலு இன்று பேசினார். அப்போது தெரிவிக்கையில்

நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது எத்தனை அடி பட்டிருப்பேன். எவ்வளவு உதை பட்டிருப்பேன். மானம், ஈனம், சுய மரியாதை எல்லாம் இழந்துட்டு வந்தாதான் கட்சியில் நிர்வாகியா இருக்க முடியும்.

தேர்தலில் சீட்டு கிடைக்காதவர்கள் எல்லாம் என்னை திட்டுகிறார்கள். பின்ன எப்பவும் மாலை போட்டுட்டு இருப்பார்களா? கல்லால அடிக்காத வரைக்கும், காயம் படாத வரைக்கும் சந்தோஷப்படுங்கள். எனக்கு எல்லாம் பழகிவிட்டது என தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply