மானம் இழந்தவர்கள்தான் கட்சி நிர்வாகியாக இருக்க முடியும் – டி ஆர்.பாலு பரபரப்பு கருத்து!

காஞ்சிபுரம் (13 பிப் 2022): மானம், ஈனம், சுய மரியாதை எல்லாம் இழந்துட்டு வந்தாதான் கட்சியில் நிர்வாகியா இருக்க முடியும். என்று தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டி.ஆர்.பாலு இன்று பேசினார். அப்போது தெரிவிக்கையில் நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது எத்தனை அடி பட்டிருப்பேன். எவ்வளவு உதை பட்டிருப்பேன். மானம், ஈனம், சுய மரியாதை எல்லாம் இழந்துட்டு வந்தாதான் கட்சியில் நிர்வாகியா…

மேலும்...

இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை – மக்களவையில் திமுக வாதம்!

புதுடெல்லி (14 செப் 2020): நீட் தேர்வால் இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அப்போது நீட் தேர்வு தற்கொலை குறித்த பிரச்சனையை திமுக எழுப்பியது. அப்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, ‘நீட் தேர்வின் காரணமாக 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த…

மேலும்...

திமுகவில் போட்டி போடும் டி.ஆர்.பாலு – துரைமுருகன்!

சென்னை (03 செப் 2020): திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு மனுதாக்கல் செய்துள்ளார். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வருகிற 9-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார். இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு…

மேலும்...

ஆசை பட்டவர்களுக்கு பதவியில்லை – அதிருப்தியில் உடன்பிறப்புக்கள்!

திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டதால் திமுக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்குப் பதிலாகத் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்றவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறன், மதுரை மூர்த்தி உட்பட…

மேலும்...

திமுகவில் டி.ஆர் பாலு திடீர் போர்க்கொடி – படு அப்செட்டில் ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): டி.ஆர் பாலுவின் நடவடிக்கைகளால், திமுக தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகவும் இருந்தார். ஆனால் இரு பதவிகளில் இருப்பது சரியானதல்ல என்று கே.என்.நேருவுக்கு அறிவாலயப் பதவி கொடுக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை திமுகவுக்கு வழங்க பாஜக முன்வந்துள்ளது. ஆனால் அதனை ஏற்க ஸ்டாலின் தயாராக இல்லை. காரணம், ஏற்கெனவே பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள…

மேலும்...

டி.ஆர்.பாலு நீக்கம் – கே.என்.நேருக்கு பதவி!

சென்னை (26 ஜன 2020): திமுகவில் டி.ஆர்.பாலு வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு பதிலாக அவர் வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருவுக்கு வழங்கப்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கே.என்.நேருக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...