எச்.ராஜா நேர் காணல்களை புறக்கணிக்க பத்திரிகையாளர்கள் திடீர் முடிவு!

சென்னை (28 செப் 2021):பத்திரிகையாளர்களை அவமரியதையாக விமர்சித்த பாஜக எச்.ராஜாவை புறக்கணிக்க பத்திரிகையாளர்கள் மன்றம் முடிவெடுத்துள்ளது. நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், எச்.ராஜா பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது. இதனை அடுத்து எச்.ராஜா நேர்காணல்களை புறக்கணிக்க சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் முடிவெடுத்துள்ளது.

மேலும்...

எச்.ராஜா தோல்விக்கு யார் காரணம்? – உண்மையை போட்டுடைத்த பாஜகவினர்!

காரைக்குடி (05 ஜூலை 2021): கடந்த சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவின் தோல்விக்கு யார் காரணம்? என்பதை போட்டுடைத்துள்ளனர் பாஜக நிர்வாகிகள். கடந்த தேர்தலில் எச்.ராஜாவின் படுதோல்விக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளே காரணம் என்ற ஒரு புகாரை எச்.ராஜா தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் செலவுக்காக பாஜக தலைமை கொடுத்த ரூ 13 கோடி நிதியை எச் ராஜா சொந்த செலவுக்கு பயன்படுத்திவிட்டதாக பாஜக தலைமைக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் புகார் அனுப்பினர். இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று…

மேலும்...

தமிழ் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது திமுக – எச்.ராஜா!

காரைக்குடி (27 ஜூன் 2021): ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகத்த்திற்கு தலைகுனிவு என்று பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எச் .ராஜா, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில், ‘ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகமே தலைநிமிர்ந்தது,’ என்றார். இதுபோன்ற தலைகுனிவு வேறில்லை. தமிழகத்தின் செண்பகராமன் பிள்ளை தான் ஜெய்ஹிந்த் என்று முன்மொழிந்தார்….

மேலும்...

எச் ராஜா மீது நடவடிக்கை? – பாஜக தலைவர் எல்.முருகன் பதில்!

சென்னை (26 ஜூன் 2021): கட்சி பணத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் வீடு கட்டி வருவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. குறிப்பாக முன்னாள் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தோல்வி அடைந்தற்கு பாஜக நிர்வாகிகள்தான் கரணம் என்று சரமாரியாக குற்றம் சாட்டினார். ஆனால் எச். ராஜாவின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில்…

மேலும்...

எச்.ராஜா மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக நிர்வாகிகள்!

காரைக்குடி (24 ஜூன் 2021): எச்.ராஜாவுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அனால் இந்த தோல்விக்கு கரணம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் என குற்றம் சாட்டுகிறார். இந்த நிலையில் காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் பாலா உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம்…

மேலும்...

முதல்வர் எடப்பாடி மீது எச் ராஜா பாய்ச்சல்!

சென்னை (09 நவ 2020): முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் மட்டும் கொரோனா பரவாதா? என்று எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடை குறித்து எச் ராஜா தெரிவிக்கையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் கூட்டத்தில் பரவாத கொரோனா நோய் தொற்று வேல்…

மேலும்...

எச்.ராஜாவா? எல் முருகனா? – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு!

ராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வரும், திமுக சார்பில் முக ஸ்டாலினும், இன்னும் பல கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அது போலவே பாஜக சார்பிலும்…

மேலும்...

ஆன்லைன் – காதல் – தற்கொலை ஹெச்,ராஜா கருத்து!

மதுரை (15 செப் 2020): ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா? பைகளில் இலவச பொருட்களை வாங்கியவர்கள், மோடியால் மூட்டையில் வாங்கி செல்வதாக மக்கள் கூறுகின்றனர். மாநிலங்களுக்கான…

மேலும்...

கொரோனா பாதிப்பில் கோவை இரண்டாம் இடம் வகிக்கிறதே ஒருவேளை அதுதான் காரணமா?

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம் வகித்தாலும் தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டம் இடம் வகிக்கிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 6412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 199 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 834 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் சென்னை முதலிடம் வகிக்கிறது. கோவை இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நிலையில் பலரும் கொரோனா பாதிப்பிற்கு டெல்லி…

மேலும்...

அதிமுகவுக்கு எச்.ராஜா பகிரங்க மிரட்டல்!

திருவண்ணாமலை (27 பிப் 2020): சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் தமிழக ஆட்சி கவிழும் என்று எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, “. தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அப்படி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். திமுகவை இந்து விரோத கட்சியே அல்ல என்று…

மேலும்...