மதங்களை கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்த தமுமுக!

Share this News:

சென்னை (28 ஜூன் 2021); மதங்களைக் கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக் கணக்கான உடல்களை அடக்கம் செய்து பலரையும் நெகிழ வைத்துள்ளனர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) தொண்டர்கள்.

கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என விஸ்வரூபம் எடுத்து உலகையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில்,  இந்தியா மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மீதுள்ள அச்சத்தின் காரணமாக  உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இறந்தோரின் உறவினர்களே கூட முன் வருவதில்லை.

இந்த வேளையில்தான் கொரோனாவால் உயிரிழந்த பலரது உடல்களை சாதி, மதப் பேதமின்றி அரசு வழிகாட்டலுடன் அடக்கம் செய்ய முன் வந்தனர் தமுமுகவினர்.

இவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் என 121 சடலங்களை அடக்கம் செய்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல்  தகனம் செய்ய வேண்டிய உடல்களையும், அவர்களே உரிய இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர்.

இவர்களது இந்த சேவை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்களின் மகத்தான உதவியை மனம் உவந்து பாராட்டுவோமே?

 


Share this News:

Leave a Reply