மதங்களை கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்த தமுமுக!

சென்னை (28 ஜூன் 2021); மதங்களைக் கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக் கணக்கான உடல்களை அடக்கம் செய்து பலரையும் நெகிழ வைத்துள்ளனர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) தொண்டர்கள். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என விஸ்வரூபம் எடுத்து உலகையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில்,  இந்தியா மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மீதுள்ள அச்சத்தின் காரணமாக  உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இறந்தோரின்…

மேலும்...

சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினத்தில் ஜித்தா தமுமுகவிற்கு விருது!

ஜித்தா (07 டிச 2020): சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினமான கடந்த 5-12-20 அன்று ஜித்தா தமுமுகவிற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜித்தாவிலுள்ள இந்திய தூதரகத்தில் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் 2020 Indian Pilgrims Welfare Forum (IPWF) அமைப்பால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தொடர்ந்து உலகமுழுவதும் தன்னார்வலர்கள் கொண்டு மனிதநேயப்பணி செய்யும் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கப்பட்ட து. தமுமுக சார்பில் ஜித்தா மண்டல பொறுப்பாளர் பொறியாளர் கீழை இர்பான் அவர்களிடம் துணைத்தூதர் Y. சாபிர் அவர்கள்…

மேலும்...

கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானம் – வழியனுப்பிய தமுமுகவினர்!

ஜித்தா (06 ஜூன் 2020): கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் சென்ற 151 தமிழர்களை தமுமுக தன்னார்வலர்கள் வழியனுப்பி வைத்தனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு பகல் 3 மணியளவில் 32 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 151 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. ஜித்தா இந்திய தூதரக அதிகாரிகள் ஹம்னா மரியம் மற்றும் அம்ஜத் ஆகியோர் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சிராஜூதீன், ரமணா மற்றும் ஜித்தா…

மேலும்...

சென்னை திருச்சி விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு தமிழர்கள் தொடர்பு கொள்ள தமுமுக உதவி எண் அறிவிப்பு!

சென்னை (04 ஜூன் 2020) வெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவும் முகமாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: தாம்பரம் எம்.யாக்கூப் 9710217545 துணைப் பொதுச் செயலாளர், மமக எஸ்.கே.ஜாகிர் உசேன் 9884444350 மாவட்ட தலைவர், செங்கல்பட்டு வடக்கு, தமுமுக-மமக திருச்சி விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள்: உதுமான் அலி 98944 44772 மாவட்ட…

மேலும்...

இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் உயிரை காப்பாற்றிய தமுமுகவினர்!

திருப்பூர் (19 மே 2020): திருப்பூரில் மாமனாரால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிமாறனை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகியை வெட்டிய மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகேயுள்ள, பெருமாநல்லூர் பகுதியை சேர்த்தவர் மணிமாறன். இவர் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் மணிமாறனுக்கும் அவரது…

மேலும்...

ஊடகங்களின் செய்தியை பார்த்து பதற்றம் அடைய வேண்டாம் – ஜவாஹிருல்லா கோரிக்கை!

சென்னை (08 ஏப் 2020): மரணித்த முஸ்லிமின் உடலை எரியூட்டப்படும் என்ற தவறான செய்தியை வெளியிட்ட கலெக்டரின் உத்தரவை பார்த்து முஸ்லிம்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “கோவிட் 19 (கொரோனா வைரஸ்) பாதிப்பால் வேலூரில் 45 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் நபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை எரியூட்டப்படும் என்று மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்து பலரும்…

மேலும்...

சுய ஊரடங்கு கடைபிடிக்கும் நாளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் தமுமுக!

சென்னை (22 மார்ச் 2020): சுய ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்கும் மக்களில் ஆதரவற்றவர்ளுக்கும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கும் தமுமுகவினர் உணவு வழங்கி ஆதரவளித்தனர். உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைய உள்ளது….

மேலும்...

ஐயப்ப பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தமுமுகவினர்!

தென்காசி (07 ஜன 2020): ஐயப்ப பக்தர்களின் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்த பக்தர்களுக்கு தமுமுகவினர் அடைக்கலம் கொடுத்து அலுவலகத்தில் தங்க வைத்தர்னர். தென்காசி மாவட்டம் பண்பொழியில் நேற்று இரவு (6-1-2020) விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அவர்கள் சபரிமலை செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் தங்குவதற்கு அருகில் இடமின்றி தவித்தனர். இந்நிலையில் ஜயப்ப பக்தர்கள் தங்குவதற்காக பண்பொழி தமுமுக அலுவலகத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்கள்.

மேலும்...