முதல்வர் எடப்பாடி மீது எச் ராஜா பாய்ச்சல்!

Share this News:

சென்னை (09 நவ 2020): முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் மட்டும் கொரோனா பரவாதா? என்று எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தடை குறித்து எச் ராஜா தெரிவிக்கையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் கூட்டத்தில் பரவாத கொரோனா நோய் தொற்று வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா? எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தே வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்தது.” என்று அவர் கூறி உள்ளார்.


Share this News:

Leave a Reply