பாஜகவைக் கை கழுவும் எடப்பாடி – அதிர்ச்சியில் பாஜக!

Share this News:

சென்னை (24 ஜூன் 2022) : அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ராகுல் காந்தியுடன் எடப்பாடி ரகசியமாக பேசியுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனை இரு தரப்பினரும் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

மேலும் அ.தி.மு.க. தொண்டர்களின் ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியாமல் போனதை, தனக்கு ஏற்பட்ட தோல்வியாக எடப்பாடி கருதுகிறார். ஓபிஎஸ்-ஐயே பாஜக விரும்புகிறது என்பதை எடப்பாடி புரிந்து கொண்டுள்ளார்.

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே பிளவு ஏற்படலாம் என்று கருதப்படும் நிலையில், எடப்பாடி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரசுடன் கை கோர்க்கக் கூடும் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.


Share this News:

Leave a Reply