கொரோனா நோயாளிகள் அருகில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் – நெகிழ்ந்த நோயாளிகள்!

Share this News:

(30 மே 2021): கோவையில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளின் அருகில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கின்றன, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று நேரடியாக ஆய்வு செய்தார்.

அதன் ஒரு கட்டமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதில் நோயாளிகளிடம் அருகில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கனிவாக நலம் விசாரித்தார். பிபிஇ கிட் அணிந்து இருந்ததால், மருத்துவர்கள் போல அருகில் சென்று நலம் விசாரித்தார். ஸ்டாலின் உடன் சில மருத்துவர்களும் உடன் இருந்தனர். முதல்வரே இப்படி நேரில் வந்து தன்னை விசாரிப்பதை பார்த்து நோயாளிகளும் நெகிழ்ந்து போனார்கள்.

மூச்சு விட முடியுதா.. சாப்பாடு நல்லா இருக்கா என்றெல்லாம் ஸ்டாலின் நோயாளிகளிடம் கேட்டார். அதோடு மருத்துவர்கள் எப்படி பார்த்துக்கொள்கிறார்கள், ஏதாவது தேவை இருந்தால் சொல்லுங்கள், சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள் என்றும் ஆறுதலாக முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளிடம் பேசினார்.


Share this News:

Leave a Reply