அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம்!

Share this News:

சென்னை (19 செப் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.

கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அ.தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பது தொடர்பாக நிர்வாகிகளிடையே எழுந்த காரசார விவாதங்களையடுத்து, உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28-ந் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையே “அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது. ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது. ராணுவ கட்டுப்பாட்டுடன் அதிமுக இருக்கிறது. அதிமுக அன்பு என்னும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அனைவரும் கருத்துகளை தெரிவிக்கவே அவசரக்கூட்டம். முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ராமர்-லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர்.” என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply