ஓபிஎஸ்சுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!

Share this News:

சென்னை(11 ஜூலை 2022): அதிமுக பொதுக் குழு நடத்த தடை இல்லை என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்றைய தினம் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கட்சியின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக விதிகளின்படி பொதுக் குழுவை நடத்திக் கொள்ளலாம். மேலும் 82 சதவீதம் பேர் பொதுக் குழுவை கூட்ட கோரிக்கை விடுத்ததால் கட்சி உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என தீர்ப்பளித்தார்.

இதற்கிடையே அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் கற்களை வீசியும் கம்புகளை வீசியும் தாக்கி வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply