லவ் ஜிஹாதுக்கு எந்த ஆதாரமும் இல்லை – நீதிமன்றத்தில் வாங்கி கட்டிக் கொண்ட யோகி அரசு!

அலகாபாத் (07 ஜன 2021): உத்திர பிரதேச அரசின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முஸ்லீமுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்து வாங்கி கட்டிக் கொண்டது. உத்திர பிரதேசத்தில் லவ்ஜிஹத் மதமாற்ற தடை சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களை குறி வைத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அக்‌ஷய் குமார் தியாகி என்பர் அளித்த புகாரின் அடிப்படையில் நதீம் எனபவர் முசாபர்நகரில்…

மேலும்...

பத்தாம் வகுப்பு மாணவர் சக மாணவரால் சுட்டுக் கொலை!

லக்னோ (31 டிச 2020): உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், 14வயது மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பில் இரு மாணவர்களுக்கு இடையே யார் பிடித்த இடத்தில் உட்காருவது தொடர்பாக நேற்று பிரச்சினை எழுந்தது. இதில் கோபமடைந்த ஒரு மாணவன், வீட்டிலிருந்து துப்பாக்கியை கொண்டுவந்து தன்னுடன் சண்டையிட்ட சக மாணவனை வகுப்பறையில்…

மேலும்...

பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் அடித்துக் கொலை – பரபரப்பான சாலையில் அரங்கேறிய கொடூரம்!

காஜியாபாத் (29 டிச 2020): உத்திர பிரதேசம் காஜியாபாத்தின் பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவர் இரண்டு நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை இருவர் அடிப்பதை பொதுமக்கள் வீடியோவால் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிந்துள்ளனர். ஆனால் யாரும் தாக்குபவர்களைத் தடுக்கவோ அல்லது பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றவோ முயற்சிக்கவில்லை. படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாரும் முன்வரவில்லை . அஜய்யை மலர் கடை நடத்துவதில்…

மேலும்...

தவறாக பயன்படுத்தப்படும் சட்டம் – இயற்றப்பட்ட ஒரே மாதத்தில் 35 முஸ்லீம் இளைஞர்கள் கைது!

லக்னோ (28 டிச 2020): உத்தரபிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் (லவ் ஜிஹாத்) தடைச் சட்டம் இயற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு. இந்த மாதத்தில் 35 முஸ்லீம் இளைஞர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஊடக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. நவம்பர் 27 முதல் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து மாநிலத்தில் சுமார் ஒரு டஜன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாள் முதலே மாநிலத்தில் கைதுகள் தொடங்கிவிட்டன. பெண் ஒருவரின் தந்தை தனது…

மேலும்...

உத்திர பிரதேசத்தை அடுத்து மத்திய பிரதேசத்திலும் முஸ்லிம்களை குறி வைக்கும் சட்டம்!

புதுடெல்லி (27 டிச 2020): உத்தரபிரதேசத்திற்குப் பிறகு, மத்திய பிரதேச அரசு முஸ்லிம்களை குறி வைத்து மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. சர்ச்சைக்குரிய மதமாற்று தடை சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில், 35 முஸ்லிம் இளைஞர்கள் ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் மாநிலத்தில் டஜன் கணக்கான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன . சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாளே முஸ்லிம்களின் கைதுகள் தொடங்கிவிட்டன. சில சந்தர்ப்பங்களில், ஆதாரங்கள் இல்லா…

மேலும்...

யோகி ஆதித்யநாத் அரசுக்கு பலத்த அடி – டாக்டர் கஃபீல்கானுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

புதுடெல்லி (17 டிச 2020): யோகி ஆதித்யநாத் அரசு டாக்டர். கபீல்கான் மீது சுமத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (என்எஸ்ஏ) ரத்து செய்ததற்கு எதிராக உ.பி. அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டாக்டர் கபில் கான் மீது சுமத்தப் பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை ரத்து செய்யக் கோரி உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…

மேலும்...

மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதால் ஆவேசமடைந்த புதுமணப் பெண் – தடை பட்ட திருமணம்!

லக்னோ (15 டிச 2020): மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை நடன மாட இழுத்துச் சென்றதால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. உத்திர பிரதேசம் பரேலியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணை மணமகனின் நண்பர்கள் நடனமாட இழுத்துச் சென்றன. இதனால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் அவரது வீட்டுக்கு திரும்பி செல்ல முடிவெடுத்தார். மணமகளை சமாதானம் செய்ய இரு தரப்பினரும் முயன்றனர். எனினும் மணமகள் செவிசாய்க்கவில்லை. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக…

மேலும்...

மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

லக்னோ (28 நவ 2020): மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு உத்திர பிரதேச ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…

மேலும்...

லவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

லக்னோ (24 நவ 2020): வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் மனித உரிமையில் அரசு தலையிட முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லவ் ஜிஹாத் குற்றச்சாட்டுக்கு எதிராக சல்மத் அன்சாரி மற்றும் பிரியங்கா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. இருவேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிஹாத் என்ற பெயரில் திசை திரும்பும் வேலையை பாஜக தலைமையிலான உபி அரசு செய்து வருகிறது. திருமணத்திற்காக மதம் மாறுவதையும் உபி…

மேலும்...

லவ் ஜிஹாதிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை – முடிவடையும் வழக்குகள்!

லக்னோ (07 நவ 2020): உத்திர பிரதேசத்தில் லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டில் பதிவான 14 வழக்குகள் எந்த ஆதாரங்களும் இல்லாததால் முடிவுக்கு வருகின்றன. ஆகஸ்ட் 20 அன்று, யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் நாட்டில் லவ் ஜிஹாத் என்ற வகையில் ஷாலினி என்ற பெண் குறித்த வீடியோவை ட்வீட் செய்தார். ஷாலினியின் தாயாரும், ஷாலினி லவ் ஜிஹாதில் சிக்கியிருப்பதாக புகார் அளித்தார். இதனை அடுத்து உ.பி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்….

மேலும்...