குஷ்புவை கழட்டி விட பாஜகவின் பலே திட்டம்!

Share this News:

சென்னை (17 டிச 2020): 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக பாஜகவின் சார்பில் குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்கிற கணிப்புகள் உள்ள நிலையில், அதிமுகவுடன் தான் கூட்டணி என்பது பாஜகவில் உறுதியாகிவிட்டது. தமிழக பாஜகவும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. இதில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூவை சென்னையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியின் பொறுப்பாளராக நியமனம் செய்துள்ளது.

இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பூ, தன மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்ட பணியை முழுமையாக பூர்த்தி செய்வதாக உறுதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை பாஜகவில் இணைந்தது முதலே தனிமைப்படுத்தப் பட்டதுபோல் காணப்படும் குஷ்புவை திமுகவின் கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு பொறுப்பாளராக நியமித்திருப்பதின் மூலம் குஷ்புவுக்கு நெருக்கடி கொடுத்து குஷ்புவை ஓரங்கட்ட பாஜகவின் திட்டம் என்பதாகவும் கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply