பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

போபால் (04 டிச 2022): மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் கன்யாசாவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராஜேஷ் கண்ணோஜே பள்ளி அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 25 ஆம் தேதி, யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தை அடைந்தபோது, ​​​​ஆசிரியர் யாத்திரையில் பங்கேற்றார். ஆசிரியர் பள்ளி விடுமுறையில் யாத்திரையில் கலந்து கொண்டார். அவர் பேரணியில் பங்கேற்ற புகைப்படங்களையும் தனது…

மேலும்...

என் மீதான தாக்குதலுக்கு பாஜக ரூ 1000 கோடி செலவழித்துள்ளது – ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு!

புதுடெல்லி (28 நவ 2022): என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதற்காக பா.ஜ.க. ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்து உள்ளது என ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யான ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரையானது காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும். இதுவரை கேரளா, கர்நாடகா,…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

இந்தூர் (19 நவ 2022): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மத்திய மற்றும் மாநில போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தின் ஆதாரம் குறித்து மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் வந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. ஒரு இனிப்பு கடையில் தபால் மூலம் கிடைத்த…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையில் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி – வீடியோ!

ஐதராபாத் (03 நவ 2022): இந்திய தேசிய காங்கிரஸ் (INC) நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெர்சி அணிந்த சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி. அந்த சிறுவனின் பேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு, பந்துவீசுவதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதுடன் வீடியோ முடிகிறது. இந்தியாவை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸின்…

மேலும்...

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை விளம்பரத்தில் சாவர்க்கர் படம்!

மாண்டியா (06 அக் 2022): காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கரின் படம் மீண்டும் இடம் பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மாண்டியாவில் அமைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டில் சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டது. சாந்திநகர் எம்.எல்.ஏ என்.ஏ.ஹாரிஸ் பெயரில் ஃப்ளக்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் தாங்கள் ஒட்டவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார். சாவர்க்கருடன், ராகுல்…

மேலும்...

முஸ்லிம் சிறுமியுடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக விஷமப்பிரச்சாரம்!

புதுடெல்லி (21 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையின் போது பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்திருந்த சிறுமியின் கையை பிடித்தபடி ராகுல் காந்தி நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்து பாஜகவின் வகுப்புவாத பிரசாரம். செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாஜகவுக்கு இது பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (15 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையை அடுத்து இன்னொரு யாத்திரையை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் புதிய யாத்திரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கில் குஜராத்தில் இருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்யும் புதிய யாத்திரையை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், பாரத்…

மேலும்...

சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதாக ராகுல் காந்தி மீது புகார்!

புதுடெல்லி (14 செப் 2022): பாரத் ஜோடோ யாத்ராவை சட்ட ரீதியாக சிக்கலாக்க தேசிய குழந்தைகள் நலக் குழு மூலம் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான கன்னியாகுமரி-காஷ்மீர் பாரத் ஜோடோ யாத்திரை குழந்தைகளை அரசியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த…

மேலும்...

தமிழ் நாட்டிற்கு நன்றி – நாளுக்குநாள் ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு!

கன்னியாகுமரி (11 செப் 2022): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 56 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளார் ராகுல். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி, இன்று கேரள எல்லையில் தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, செறுவாரகோணத்தில் இருந்து…

மேலும்...

ராகுல் காந்தி டி-சர்ட் விவகாரம் – பாஜகவுக்கு மஹுவா மொய்த்ரா எச்சரிக்கை!

புதுடெல்லி (10 செப் 2022): ராகுல் காந்தி மீது பாஜகவின் ‘டி-சர்ட்’ கேலிக்குப்பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பாஜக எல்லை மீறுவதாக தெரிவித்துள்ளார். நடந்து வரும் “பாரத் ஜோடோ யாத்ரா” பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த டி-சர்ட்டின் விலை 41,000 ரூபாய்க்கு மேல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது. இந்நிலையில் பாஜகவின் கீழ்த்தரமான விமர்சனங்களை எதிர் கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து…

மேலும்...