முஸ்லிம் சிறுமியுடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக விஷமப்பிரச்சாரம்!

Share this News:

புதுடெல்லி (21 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையின் போது பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்திருந்த சிறுமியின் கையை பிடித்தபடி ராகுல் காந்தி நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்து பாஜகவின் வகுப்புவாத பிரசாரம். செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாஜகவுக்கு இது பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்திருந்த சிறுமியின் கையை பிடித்தபடி ராகுல் காந்தி நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்வீட் செய்திருப்பதாவது: ராகுல் காந்தியின் வாக்கு வங்கிக்கு இந்த யாத்திரை உதவுகிறது என்பதாக ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ், பிரதமர் நரேந்திர மோடி தொப்பி மற்றும் முக்காடு அணிந்த மக்களுடன் நிற்பது போன்ற படங்களை ட்வீட் செய்து காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

சம்பித் பத்ராவின் ட்வீட்டிற்கு பத்திரிக்கையாளர் முகமது ஜுபைரும் பதிலளித்துள்ளார். சம்பித் பத்ரா தொப்பி அணிந்து நிற்கும் படங்களை சுபைர் பகிர்ந்துள்ளார். மேலும் ஜோடோ யாத்திரையின் போது கிருஷ்ணர் உடையில் குழந்தையுடன், மற்றும் பள்ளி மாணவர்களுடன் சீருடையில், ராணுவ உடையில் குழந்தைகளுடன் ராகுல் நிற்பது போன்ற பல்வேறு புகைப்படங்களையும் ஜுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Share this News:

Leave a Reply