மோடியை மீண்டும் சீண்டிய கமல்!

சென்னை (15 ஏப் 2020): மும்பையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மோடி அரசையும் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மோடி சமீபத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி கூறும் விதமாக வீட்டின் முகப்பில் நின்று கைத்தட்டச் சொன்னார். பால்கனியில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஒற்றுமையை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கமல்ஹாசன் மோடி அரசை…

மேலும்...

காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாஸிட்டிவ் – பீதியில் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏக்கள்!

அஹமதாபாத் (15 ஏப் 2020): குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, உள்துறை அமைச்சர் மற்றும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் செவ்வாயன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இவர்களை சந்தித்த ஆறு மணி நேரத்திற்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து காந்தி நகர் SVP மருத்துவமனையில் இம்ரான் கொதாவாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனையில்…

மேலும்...

மகனின் நிலையை நினைத்து நடிகர் விஜய் கவலை!

சென்னை (14 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவில் சிக்கியுள்ள நடிகர் விஜயின் மகன் சஞ்சயை நினைத்து நடிகர் விஜய் கவலை அடைந்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களுக்கு கூட அனுமதி இல்லை – கோவையில் அதிரடி!

கோவை (14 ஏப் 2020): கோவையில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடத்தில் முதலில் சென்னையும் அடுத்து கோவையும் இருக்கிறது. இதனால் கோவையில் உள்ள 14 முக்கிய இடங்களை மாவட்ட நிர்வாகம் முழுவதுமாக முடக்கியுள்ளது. அதில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மேட்டுப்பாளையம், மேட்டுக்கடை, சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், மீன்…

மேலும்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 10 ஆயிரம் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை (14 ஏப் 2020): குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது மே மாதத்தில்…

மேலும்...

கொரோனாவுக்கு இலவச பரிசோதனை குறித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (14 ஏப் 2020): கொரோனாவுக்கு பரிசோதனை செய்ய முன்வரும் எல்லோருக்கும் இலவச பரிசோதனை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து சோதனை செய்வதற்கு தற்போது வரை 157 அரசு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகிறது. அதே போல 67 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா சோதனைக்கான கட்டணமாக 4,500 ரூபாயை மத்திய அரசு நியமித்தது. தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனையை இலவசமாக…

மேலும்...

பிரதமர் மோடியின் பேச்சில் இன்றைய மாற்றம் – அதுதான் காரணமா?

புதுடெல்லி (14 ஏப் 2020): பிரதமர் மோடி ஏதாவது பேசினால் பொதுமக்களுக்கு ஏதாவது செய்யச் சொல்லி டாஸ்க் போல் கொடுப்பார். ஆனால் இன்று அப்படி எந்த அறிவிப்பும் வைக்கவில்லை. கொரோனா பரவலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்கள் முன்னிலையில் மீண்டும் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றார்….

மேலும்...

மே.3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!

புதுடெல்லி (14 ஏப் 2020): மே 3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை நிட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று நள்ளிரவுடன் 21 நாள் கெடு முடிவடைகிறது. இதற்கிடையில் இன்று காலை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இச்சூழலில் தற்போது நாடு முழுவதும் மே 3 ஆம்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – ஊடகங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (14 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் விவகாரத்தில் இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டம் குறித்து மட்டுமே…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது – 339 பேர் பலி!

புதுடெல்லி (14 ஏப் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி, 200 க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய…

மேலும்...