என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார்? – தமிமுன் அன்சாரி அதிரடி!

சென்னை (05 பிப் 2020): நடிகர் ரஜினியின் முன்னோர்கள் ஆவணம் உண்டா இல்லையேல் என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று ரஜினி தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி, “கந்துவட்டி உள்ளிட்ட சட்ட விரோத தொழில்களை ரஜினி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில்,…

மேலும்...

இஸ்லாமியர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் – ரஜினி பரபரப்பு பேட்டி!

சென்னை (05 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட இஸ்லாமியர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. நான் முறையாக வருமான வரி செலுத்துபவன். என்பிஆர் அவசியம் தேவை. அப்போதுதான் வெளிநாட்டவர்களை அடையாளம் காண முடியும். இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர்களுக்கு ஆதரவாக முதல் ஆளாக நான் நிற்பேன். முஸ்லிம்கள்…

மேலும்...

NRC-யை அமல்படுத்தும் எண்ணம் இல்லை – உள்துறை அமைச்சகம் விளக்கம்!

புதுடெல்லி (04 பிப் 2020): நாடு முழுவதும் என்.ஆர்.சியை இப்போதைக்கு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதுல் அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிக்கு தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் மக்களிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக…

மேலும்...

அமெரிக்காவில் அதிரடி – சியாட்டில் சிட்டி கவுன்சில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் – VIDEO

சியாட்டில் (04 பிப் 2020): அமெரிக்காவின் சியாட்டில் சிட்டி கவுன்சில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை உலகின் பலம் வாய்ந்த நகரசபையில் ஒன்றாகும். இங்கு இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடைபெற்றது. மேலும் வாக்கெடுப்பின் அடைப்படையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் அதிக வாக்குகள் கிடைத்ததை அடுத்து இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்…

மேலும்...

பாஜகவுக்கு பாகிஸ்தான் மீது வெறுப்பு இல்லை காதல் – பிரபல நடிகை விளாசல்!

இந்தூர் (03 பிப் 2020) பாஜகவுக்கு பாகிஸ்தான் மீது ஏதிர்ப்பு இல்லை காதல் என்று இந்தி நடிகை ஸ்வாரா பாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஸ்வாரா, செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய குடியுரிமை சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கும், ஊடுருவியவர்களை கைது செய்து வெளியேற்றுவதற்கும் ஏற்கனவே சட்ட நடைமுறைகள் உள்ளது. இப்போது புது குழப்பம் ஏன்? பாகிஸ்தான் பாடகர் அத்னான் சாமிக்கு குடியுரிமை வழங்கியதுடன், அதன்…

மேலும்...

பாஜகவிலிருந்து விலகும் தொண்டர்கள் – அதிர்ச்சியில் தலைமை!

போபால் (03 பிப் 2020): மத்திய பிரதேசத்தில் பாஜக தொண்டர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம், மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் 700 க்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து விலகல் கடிதத்தை மாநில தலைமையிடம்…

மேலும்...

குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் – ஸ்டலின்!

சென்னை (02 பிப் 2020): குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிக்காய் குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றுக்கு எதிரான ஒருகோடி கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் உரையாற்றுகையில், தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

மேலும்...

ஷஹீன்பாக் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி யார் என்று தெரிந்தது!

புதுடெல்லி (01 பிப் 2020): டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி யார் என்ற அடையாளம் தெரிந்தது. டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவன் 25 வயது கபில் குஜ்ஜார் என்று அடையாளம் தெரிந்தது. அவன் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடனும், இந்திய நாட்டில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றம் கத்தியபயே…

மேலும்...

குடியுரிமை சட்டம் தொடர்பான நாடகம் – பள்ளி தலைமை ஆசிரியை கைது!

பெங்களூரு (01 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை விமர்சித்து பள்ளி விழாவில் நிகழ்த்தப்பட்ட நாடகம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில், பிடார் மாவட்டத்தில் உள்ள, ஷாஹீன் பள்ளியில், நடந்த விழாவில் கடந்த மாதம், 21 ல் மாணவர்களின் நாடகம் நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விமர்சிக்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, நீலேஷ் ரக் ஷயால் என்பவர், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன், ஷாஹீன்…

மேலும்...

டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சிறுவனாம் – அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (31 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர்…

மேலும்...