பாஜக மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவிய முதல்வர்!

திஸ்பூர் (08 அக் 2022): அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாஜக மூத்த தலைவர் ஒருவரின் கால்களைக் கழுவிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு, பெரியவர்களுக்கு மரியாதை செய்வது பாஜகவின் பாரம்பரியத்தின் அடித்தளம் என்றும், மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவியதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். கவுகாத்தியில் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

மேலும்...

விபச்சார விடுதியாக செயல்பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட்!

ரிஷிகேஷ் (27 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் இடிக்கப் பட்ட பாஜக தலைவர் மகனின் ரிசார்ட் விபச்சார விடுதியாக செயல்பட்டதாக அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரகான்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே செயல்பட்டு வந்த பா.ஜ., தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவின் ரிசார்ட்டில் பணிபுரிந்த ரிஷப்ஷனிஸ்ட் அங்கிதா பண்டாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் விபச்சாரத்திற்கு விரும்பாததால் அவர் கொலை செய்யப்பட்ததாக எழுந்த புகாரை அடுத்து வினோத் ஆர்யா கைது செய்யப்பட்டு சிறையில்…

மேலும்...

பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடுகளில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு!

கோவை (25 செப் 2022): தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பா.ஜ. க, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு காரணமாக கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நேற்று இரண்டாவது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதன்…

மேலும்...

ரிசார்ட்டில் பணிபுரியும் இளம் பெண் படுகொலை – பாஜக தலைவர் மகன் கைது!

ஹரித்வார் (24 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் அருகே உள்ளார் ரிசார்ட் ஒன்றின் 19 வயது பெண் ரிஷப்சனிஸ்ட் கொலை வழக்கில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது ரிசார்ட் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. பெண் கடந்த திங்கள்கிழமை காணாமல் போனாதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும் இதில் புல்கித் ஆர்யவின் பங்கு இருப்பதாகவும் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்….

மேலும்...

பாஜகவுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் – லாலு பிரசாத் யாதவ் திட்டவட்டம்!

பாட்னா (22 செப் 2022): 2024-ம் ஆண்டுக்குள் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற ஆர்ஜேடி மாநில கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பீகார் பயணம் குறித்து சந்தேகம் தெரிவித்த லாலு, அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் “பாஜகவிடம் நான் பணிந்திருந்தால் இத்தனை நாள் சிறையில் இருந்திருக்க மாட்டேன். நான்…

மேலும்...

இந்த ஆண்டு ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பாஜக செய்த செலவு 344 கோடி!

புதுடெல்லி (22 செப் 2022) : இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களுக்கான பிரச்சாரத்திற்காக பாஜக ரூ.344.27 கோடி செலவு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு இந்த மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ரூ.218.26 கோடி செலவிட்டுள்ளது. ஐந்தாண்டுகளில் 58 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு அதிக பணம் செலவாகியுள்ளது. விர்ச்சுவல் பிரச்சாரத்திற்கு மட்டும் சுமார் 12 கோடி…

மேலும்...

முஸ்லிம் சிறுமியுடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக விஷமப்பிரச்சாரம்!

புதுடெல்லி (21 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையின் போது பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்திருந்த சிறுமியின் கையை பிடித்தபடி ராகுல் காந்தி நடந்து செல்லும் படத்தைப் பகிர்ந்து பாஜகவின் வகுப்புவாத பிரசாரம். செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாஜகவுக்கு இது பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது…

மேலும்...

ராகுல் காந்தி டி-சர்ட் விவகாரம் – பாஜகவுக்கு மஹுவா மொய்த்ரா எச்சரிக்கை!

புதுடெல்லி (10 செப் 2022): ராகுல் காந்தி மீது பாஜகவின் ‘டி-சர்ட்’ கேலிக்குப்பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பாஜக எல்லை மீறுவதாக தெரிவித்துள்ளார். நடந்து வரும் “பாரத் ஜோடோ யாத்ரா” பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த டி-சர்ட்டின் விலை 41,000 ரூபாய்க்கு மேல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது. இந்நிலையில் பாஜகவின் கீழ்த்தரமான விமர்சனங்களை எதிர் கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து…

மேலும்...

முஸ்லிம் முதியவர் படுகொலை – பஜக பிரமுகர் உட்பர 22 பேர் கைது!

லக்னோ (09 செப் 2022):உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் முஸ்லிம், முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை அன்று 55 வயதான முஸ்தகீமின் ஆடு ஒன்று அவரது பக்கத்து வீட்டுக்காரரான சந்தீப்பின் வயலில் அலைந்ததை அடுத்து, இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது, அன்று மாலை, முஸ்தகீமின் வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் படுகாயமடைந்த முஸ்தகிம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த…

மேலும்...

அண்ணாமலை தலைமைக்கு ஆபத்து – தமிழக பாஜகவில் மாற்றம்!

சென்னை (07 செப் 2022): பாஜகவில் அண்ணாமலை செயல்படும் விதம் பாஜகவினருக்கே பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழக தலைமையில் மற்றம் வரலாம் என தெரிகிறது. ஏற்கனவே அண்ணாமலையின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருக்கும் மூத்த பாஜக தலைவர்கள் தற்போது மேலும் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில் எல்லையில் இறந்த தமிழக ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்துவதற்கு, மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது, பா.ஜ.கவினர் செருப்பு வீசிய சம்பவம்…

மேலும்...