அண்ணாமலை தலைமைக்கு ஆபத்து – தமிழக பாஜகவில் மாற்றம்!

Share this News:

சென்னை (07 செப் 2022): பாஜகவில் அண்ணாமலை செயல்படும் விதம் பாஜகவினருக்கே பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழக தலைமையில் மற்றம் வரலாம் என தெரிகிறது.

ஏற்கனவே அண்ணாமலையின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருக்கும் மூத்த பாஜக தலைவர்கள் தற்போது மேலும் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில் எல்லையில் இறந்த தமிழக ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்துவதற்கு, மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது, பா.ஜ.கவினர் செருப்பு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

இதன் பின்னணியில் அண்ணாமலைதான் உள்ளார் என்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. அதை அவர் பேசிய ஆடியோ ஒன்று உறுதி படுத்தியது. அனால் “ஆடியோவில் பேசியது நான்தான் அதை திமுகவினர் வெட்டி ஒட்டியுள்ளனர்.” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

எச் ராஜா உள்ளிட்டோர் அது அண்ணாமலை குரல் அல்ல என்று விளக்கம் அளித்திருந்த நிலையில், அண்ணாமலை ஒத்துக் கொண்டது முத்த பாஜக தலைவர்களை முகம் சுழிக்க வைத்தது. மேலும் நிதியமைச்சர் பிடிஆரை அண்ணாமலை தரக்குறைவாக விமர்சித்தது கட்சி தலைமைக்கே பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அண்ணாமலை தலைமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. அண்ணாமலையின் நடவடிக்கைகள் கட்சியின் பெரும்பாலான தலைவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதால் , தலைமையில் விரைவில் மற்றம் ஏற்படலாம் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply