அதிமுக விழாவில் மத்திய அமைச்சருக்கு கிடைத்த அவமானம்!

விருதுநகர் (06 மார்ச் 2020): புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை அதிமுக பிரமுகர்கள் அவமானப் படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக் கட்டட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு தமிழக அமைச்சர்களும், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனும் கலந்து கொண்டார். விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசும்போது அவரது…

மேலும்...

கோவையில் பாஜக இந்து முன்னணியினர் இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

கோவை (02 மார்ச் 2020): கோவையில் பாஜக, இந்து முன்னணியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு அலுவலகம் அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டன. அதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோர் கார் ஓட்டி வந்த டிரைவருக்கு ஆதரவாகப்…

மேலும்...

டெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்வாவினர் வன்முறை வெறியாட்டம் – 2 பேர் பலி

ஷில்லாங் (02 மார்ச் 2020): மேகாலயாவில் சி.ஏ.ஏ. விவகாரத்தில் இந்துத்வா கும்பல் நடத்திய வன்முரை வெறியாட்டத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் கத்தி குத்தில் படுகாயமடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. டெல்லியின் வடகிழக்கில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் இந்துத்துவா கும்பல் நடத்திய இனப்படுகொலையில் 42 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தற்போது மேகாலயா மாநிலத்திலும் சி.ஏ.ஏ.வால் வன்முறை வெடித்துள்ளது பொதுமக்களிடையே…

மேலும்...

டெல்லி கலவரத்தில் முஸ்லிம்கள் பாதுகாத்த இந்து கோவில்!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவர சூழலில் இந்து (சிவா) கோவிலை முஸ்லிம்கள் பாதுகாத்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில் ஒருபுறம் அமைதி வழி போராட்டத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத மோதலாக மாற்ற முயற்சிக்க இதுவரை 41 பேரை பலி…

மேலும்...

துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்தவர் கைது!

கோவை (28 பிப் 2020): கோவையில் துப்புரவு தொழிலாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி பெண், கழிவறையை துப்புரவு செய்துகொண்டிருந்தபோது, அங்கு சென்ற ஜோதி, அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் கூச்சலிடவே, பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளார். இதுகுறித்து அந்த பெண் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்….

மேலும்...

பிஜேபியின் பொதுச் செயலாளர் அமெரிக்காவுக்கு மிரட்டல்!

புதுடெல்லி (28 பிப் 2020): பிஜேபியின் பொதுச் செயலாளர் சந்தோஷ், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி ஸான்டர்ஸுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “உங்களது தேர்தலில் புகுந்து தில்லுமுல்லு செய்வோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புது டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரத்திற்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்திருந்தார். அதைக் கண்டித்து பெர்னி ஸான்டர்ஸ் கடுமையான முறையில் டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்திருந்தார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியிருந்த பத்திரிகைச் செய்தியைச்…

மேலும்...

நடந்தது இதுதான் – பாஜகவின் கூட்டணி கட்சி எம்பி டெல்லி போலீஸ் குறித்து அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (28 பிப் 2020): ‘டெல்லியில் நடைபெறும் வன்முறைக்கு போலீஸ்தான் முழுக் காரணம். அதற்கு நானே ஆதாரம்’ என்று பாஜகவின் கூட்டணி கட்சி எம்பியும், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் மகனுமான நரேஷ் குஜ்ரால் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். பஞ்சாப் சிரோன்மணி அகாலி தள் கட்சியின் மக்களவை உறுப்பினர் நரேஷ் குஜ்ரால். இவர் பஞ்சாபில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். புதன்கிழமை (26-2-2020) இரவு 11.30 மணியளவில் இவருக்குத் தெரிந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது….

மேலும்...

டெல்லி கலவரத்தில் மற்றும் ஒரு சோகம் – மூன்று புது மாப்பிள்ளைகள் பலி!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்தில் பலியானோர்களில் புதிதாய் திருமணமான மூன்று பேரும் அடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம்…

மேலும்...

ரஜினிக்கு பாஜக கண்டனம்!

சென்னை (27 பிப் 2020): டெல்லி வன்முறைக்கு மத்திய உளவுத்துறையே என்று கூறிய நடிகர் ரஜினியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக நேற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்திருக்கவேண்டும். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்….

மேலும்...

பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை – காவல்துறையிடம் மனு!

திருப்பூர் (27 பிப் 2020): பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கோரி திருப்பூர் காவல் நிலையத்தில் பிரியாணி கடைக்காரர்கள் மனு அளித்துள்ளனர். சிஏஏ வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் திருப்பூரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறவுள்ளது. பேரணியின்போது, பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து,…

மேலும்...