டெல்லி கலவரத்தில் மற்றும் ஒரு சோகம் – மூன்று புது மாப்பிள்ளைகள் பலி!

Share this News:

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்தில் பலியானோர்களில் புதிதாய் திருமணமான மூன்று பேரும் அடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பலியானவர்களில் மூன்று பேர் புதிதாய் திருமணம் ஆனவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

11 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆன ஒருவர் பலியாகியுள்ளார், அவரது குடும்பத்தினர் பலர் கொடுமையாக தாக்கப்படும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 22 வயது ஆட்டோ டிரைவரும் பலியாகியுள்ளார். அவருக்கு திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆகின்றன.

அதேபோல இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன ஒருவரும் வன்முறையாளர்களின் தாக்குதலால் பலியாகியுள்ளார். அவரது மனைவி சுயநினைவின்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பலர் காணாமல் போய் உள்ளதாகவும் ,இதனால் டெல்லி குரு தெக் பகதூர் மருத்துவமனையில் பலர் குவிந்துள்ளனர். காணாமல் போன பலரையும் அவர்கள் அங்கு தேடி வருகின்றனர். பிணவரைகளிலும் சென்று யாரும் நம் உறவினரின் உடல்கள் உள்ளனவா? என்றும் தேடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply