பிஜேபியின் பொதுச் செயலாளர் அமெரிக்காவுக்கு மிரட்டல்!

Share this News:

புதுடெல்லி (28 பிப் 2020): பிஜேபியின் பொதுச் செயலாளர் சந்தோஷ், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி ஸான்டர்ஸுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “உங்களது தேர்தலில் புகுந்து தில்லுமுல்லு செய்வோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புது டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரத்திற்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்திருந்தார். அதைக் கண்டித்து பெர்னி ஸான்டர்ஸ் கடுமையான முறையில் டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்திருந்தார்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியிருந்த பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக்காட்டி, “200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களுக்கு இந்தியா தாய்நாடாக உள்ளது. முஸ்லிம் எதிர்ப்புக் கும்பலின் பரவலான வன்முறையில் குறைந்தபட்சம் 27 பேர் வரை இறந்துள்ளனர். அதிகமானோர் காயமடைந்துள்ளனர். “அது இந்தியாவின் பிரச்சினை” என்று தட்டிக் கழித்துள்ளார் டிரம்ப். மனித உரிமைகள் மீதான தலைமையின் தோல்வி இது” என்று பெர்னி ஸான்டர்ஸ் ட்வீ்ட் செய்திருந்தார்.

“நாங்கள் நடுநிலையைப் பேண நினைத்தாலும் நீங்கள் உங்களது அதிபர் தேர்தலில் நாங்கள் பங்கு வகிக்கும்படி செய்கிறீர்கள். சொல்வதற்கு வருந்துகிறேன். நீங்கள் எங்களை வற்புறுத்துகிறீர்கள்.” என்று அதற்கு பதில் ட்வீட் செய்திருந்தார் பிஜேபியின் சந்தோஷ்.

ஜனாதிபதி டிரம்ப் முந்தைய தேர்தலில் வெற்றியடைந்ததற்கு ரஷ்ய அதிபர் புதினின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டு அமெரிக்கர்களிடையே பரவியுள்ளது. இப்பொழுது இந்தத் தேர்தலில் நாங்கள் அதைப்போல் தலையிடுவோம் என்று இந்தியாவிலுள்ள ஒரு பிஜேபி தலைவர் சொல்வதை வேடிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது என்று ஹஃப்பிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சந்தோஷ் பின்னர் தனது ட்வீ்ட்டை நீக்கிவிட்டார்.


Share this News:

Leave a Reply