தப்லீக் ஜமாஅத்தினர் அப்பாவிகள் – உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்!

புதுடெல்லி (18 ஏப் 2020): தேசத்தின் ஒவ்வொரு முஸ்லிமும் தப்லீகியை பின்பற்றுபவர்கள் இல்லை; தப்லீகிகள் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்படவும் இல்லை என்று புதுதில்லி சிறுபான்மை கமிஷன் தலைவரான டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான் மற்றும் உறுப்பினர் கர்தார் சிங் கோச்சார் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு,ம் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், கர்தார் சிங் கோச்சார் ஆகியோர் நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: “டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும்…

மேலும்...

கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்ற தப்லீக் ஜமாத்தினர் சிறையிலடைப்பு!

சேலம் (17 ஏப் 2020): கொரோனா தொற்று பாதிக்கப் பட்ட ஐந்து பேர் உட்பட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த 16 பேர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 13,430 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 448 பேர் உயிரிழந்துள்ளனர். 1768 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் தப்லீக் ஜமாத்தினர் பலரும் கொரோனா தொற்று மற்றும் சந்தேகத்தின் பேரில் தமிழகம் முழுவதும்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்களின் அவதூறு – பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (16 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்கள் அவதூறு பரப்பி வரும் நிலையில், அந்த ஊடங்களுக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை உறுதி செய்த மத்திய அரசு, மார்ச் 20 வரை இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டதே தவிர…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – ஊடகங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (14 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் விவகாரத்தில் இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டம் குறித்து மட்டுமே…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து வீண் விவாதம் வேண்டாம் – மன்சூர் காஷிபி கோரிக்கை!

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிக்கப் பட்டவர்களாக கூறப்படும் தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் வீண் விவாதம் வேண்டாம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் ஒருங்கினைப்பாளர் மன்சூர் காஷிபி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள கோரிக்கையில், “தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாஅத்தினரின் எண்ணிக்கை குறித்து சிலர் சமூக வலைதளங்களில் சந்தேகம் கிளப்பியுள்ளனர். தமிழக அரசு தெளிவாகவே விளக்கம் அளித்து வருகிறது. இதில் சந்தேகிக்க எதுவும் இல்லை. தமிழகத்திலிருந்து டெல்லி சென்றவர்கள்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் மீது ஊடகங்களின் அவதூறு செய்தி – ஆனால் அரசு சொல்லும் தகவல் வேறு.

புதுடெல்லி (10 ஏப் 2020): அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் 11 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜீ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் அச்செய்தி உண்மையில்லை என்பதை அரசு சொல்லும் தகவல் உறுதிபடுத்தியுள்ளது. கொரோனா தொற்று உலகமெங்கும் அதிவேகமாக பரவி பல உயிர்களை பலிகொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளே இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றன. ஆனால் இந்தியாவில் இவ்விவகாரத்தை வைத்து மத அரசியல் கொடி கட்டி பறக்கிறது. குறிப்பாக இந்துத்வா ஆதரவு ஊடகங்கள் பல போலி…

மேலும்...

கொரோனா பாதிப்பில் கோவை இரண்டாம் இடம் வகிக்கிறதே ஒருவேளை அதுதான் காரணமா?

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம் வகித்தாலும் தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டம் இடம் வகிக்கிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 6412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 199 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 834 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் சென்னை முதலிடம் வகிக்கிறது. கோவை இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நிலையில் பலரும் கொரோனா பாதிப்பிற்கு டெல்லி…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் மீது அவதூறு – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (09 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி…

மேலும்...