டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றினர். இதனால் டெல்லி போர்க்களமானது. பலரது வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 44 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர்…

மேலும்...

டெல்லி வன்முறை – கவிஞர் ஜாவித் அக்தார் மீது வழக்கு பதிவு!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி கலவரம் தொடர்பாகவும், ஏன் கலவரத்தை தூண்டிய பெரிய மனிதர்களைக் கைது செய்யவில்லை என்றும் கேள்விகள் கேட்ட கவிஞர் ஜாவித் அக்தார் மீது பிஹாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி இனப்படுகொலையில் 46 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்த வன்முறை தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி பிரமுகர் தாஹிர் உசேன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது வீட்டிற்கும் சீல் வைத்தனர். இவற்றை கவிஞர் ஜாவித் அக்தார்…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர் கான்!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களில் 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர்கானும் ஒருவர். தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 46 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்த பல்வேறு சோக பின்னணிகளும் வெளிவரவத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி ஷிவ் விஹார் பகுதியில் கொலை வெறி பிடித்தவர்களின் இரத்தப் பசிக்கு,…

மேலும்...

அமித் ஷா பதவி விலகும்வரை நாடாளுமன்றம் நடக்காது – எதிர் கட்சிகள் திட்டவட்டம்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி இனப்படுகொலைக்கு மத்திய அரசே காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இத்தனை பேர் படுகொலையை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பிரதிபலித்து வருகின்றன. டெல்லி…

மேலும்...

மோடியின் அழைப்பை ரத்து செய்ய வேண்டும் – வங்க தேசத்தில் வலுக்கும் போராட்டம்!

டாக்கா (03 மார்ச் 2020): இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று வங்க தேச அரசை எதிர்த்து டாக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் டெல்லியில் சென்ற வாரம் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 46 பேர் கொல்லப்பட்டனர். 200 க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வங்க தேசத்தின் தந்தை என அழைக்கப்படும் சேக் முஜிபுர்…

மேலும்...

300 பேர் என் வீட்டை எரித்தனர் – முன்னாள் ரிசர்வ் படை அதிகாரியின் பதற வைக்கும் தகவல்!

புதுடெல்லி (03 மார்ச் 2020): டெல்லி வன்முறை வெறியாட்டத்தின் போது முன்னாள் CRPF வீரருடைய வீடும் எரிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 22 ஆண்டுகளாக பணியாற்றி 2002ஆம் ஆண்டில் தலைமைக் காவலராக ஓய்வு பெற்றவர் அயிஷ் முகமது (58), தற்போது வடகிழக்கு டெல்லியில் ஒரு தற்காலிக நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்துள்ள அவர் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விவரித்தவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “என் வீட்டிற்கு வன்முறையாளர்கள் 200…

மேலும்...

அமித் ஷாவே பதவி விலகு – நாடாளுமன்றத்தில் அமளி!

புதுடெல்லி (03 மார்ச் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி இனப்படுகொலைக்கு மத்திய அரசே காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இத்தனை பேர் படுகொலையை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த விவகாரம் நேற்று…

மேலும்...

ரஜினியும் கமலும் இணைய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

புதுடெல்லி (02 மார்ச் 2020): நடிகர் ரஜினியும் கமலும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்ளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ரஜினி – கமல் இணைந்து நடிப்பார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம் ரஜினி – கமல் இணைந்தால் 16…

மேலும்...

துபாயிலிருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): டெல்லி மற்றும் தெலங்கானாவில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்கனவே, கேரளாவில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது டெல்லி மற்றும் தெலங்கானாவுக்கு தலா ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கரோனா பாதித்த இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவரும் தீவிர மருத்துவக்…

மேலும்...

டெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்வாவினர் வன்முறை வெறியாட்டம் – 2 பேர் பலி

ஷில்லாங் (02 மார்ச் 2020): மேகாலயாவில் சி.ஏ.ஏ. விவகாரத்தில் இந்துத்வா கும்பல் நடத்திய வன்முரை வெறியாட்டத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் கத்தி குத்தில் படுகாயமடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. டெல்லியின் வடகிழக்கில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் இந்துத்துவா கும்பல் நடத்திய இனப்படுகொலையில் 42 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தற்போது மேகாலயா மாநிலத்திலும் சி.ஏ.ஏ.வால் வன்முறை வெடித்துள்ளது பொதுமக்களிடையே…

மேலும்...