கொரோனா வைரஸ்லிருந்து பாதுகாக்க – நீதிமன்றத்தில் புதுவித மனு!

சென்னை (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கை கழுவ அதிக தண்ணீர் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அனைவரும் அடிக்கடி சோப் அல்லது கைகழுவும் திரவம் போட்டு கைகளை கழுவ வேண்டும். அடுத்தவருடன் கைகுலுக்க வேண்டாம்….

மேலும்...

சவூதியில் திருமண மண்டபம், ஓட்டல்கள், அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தற்காலிக தடை!

ரியாத் (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதியில் திருமண மண்டபம், ஓட்டல்கள், அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, மற்றும் வளைகுடா நாடான ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் கொரோனா வைரஸால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், சவூதி அரேபியாவில்…

மேலும்...

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் – தனி அறையில் பிரதமர்!

டொரன்டோ (13 மார்ச் 2020): கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவருடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்புக்காப்பாக பிரதமர் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பினார். அதையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரை கொரோனா தொற்றியுள்ளது தெரிய வந்தது. எனவே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருடைய மனைவியும் அடுத்த 14 நாள்களுக்கு தடுப்புக்காப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கனடாவில் 145…

மேலும்...

கத்தார் மற்றும் துபாயிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாசிடிவ்!

திருவனந்தபுரம் (12 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிக அளவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் கேரளத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 19…

மேலும்...

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

ஸ்பெயின் (12 மார்ச் 2020): ஸ்பெயின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்பெயின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்...

பிரபல நடிகர் நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

நியூயார்க் (12 மார்ச் 2020): பிரபல நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. ஒரு நாட்டையும் அந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சன் ஆகியோருக்கும் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்தபோது, உடல் சோர்வு மற்றும்…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 அக உயர்வு!

நியூயார்க் (11 மார்ச் 2020): அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் கரோனா கொரோனா வைரஸ் (கோவிட் -19)தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஐ எட்டியுள்ளதாக வாஷிங்டன் நல்வாழ்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளனர், இதையடுத்து அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறிப்பட்டார். அதிலிருந்து இதுவரை வாஷிங்டன்…

மேலும்...

கொரோனா வைரஸ் தாக்காமல் தடுப்பது எப்படி?

விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவிய ‘கோவிட் 19’ வைரஸ் மனிதர்களிடம் இருந்தே மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு தும்மல், இருமல் பிரச்சனை இருந்துள்ளது. இது சாதாரண வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு என்று அந்த மக்கள் கருதி இருந்தனர். ஆனால் கோவிட் வைரஸ் தாக்குதல் உயிர்க்கொல்லி என்பது பின்நாளிலேயே தெரிய வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் கோவிட் வைரஸானது 12 மணி நேரம் உயிருடன் இருக்குமாம்….

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு!

புதுடெல்லி (10 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதுவரை இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம், ஜம்மு, கர்நாடகாவில் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் புணே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன்…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவால் 43 பேர் பாதிப்பு!

புதுடெல்லி (09 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனாவிற்கு 43 பேர் பாதிக்கப்படுள்ளனர். கடந்த வருடம் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 97 நாடுகளில் பரவி விட்டது. 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...