இந்தியாவில் சுய ஊரடங்கு உத்தரவு தொடங்கியது – கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்வு!

புதுடெல்லி (22 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் , இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளன. மக்கள் நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சியளிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸால்…

மேலும்...

கொரோனா – கேரள முதல்வரின் திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா!

சென்னை (21 மார்ச் 2020): கொரோனாவை எதிர் கொள்ள கேரள முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ள திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “மார்ச் 22 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும். கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்….

மேலும்...

கனிகா கபூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவருக்கு கொரோனாவா?

புதுடெல்லி (21 மார்ச் 2020): கனிகா கபூர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது. பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா ரைவஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பிய பின், அவர் லக்னோ சென்றுள்ளார். லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100…

மேலும்...

புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு!

புதுச்சேரி (21 மார்ச் 2020): கொரோன வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் ஒருவாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வரும் மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொருட்கள் வாங்க காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வெளியில் வந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். என்று முதல்வர் நாராயணசாமி உத்தரவு…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 மார்ச் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர். மூன்று பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்...

ஒரு பிரபலத்தின் அலட்சியம் – ஒட்டு மொத்த பிரபலங்களும் அதிர்ச்சியில்!

புதுடெல்லி (21 மார்ச் 2020): பிரபல இந்தி பின்னணி பாடகி கனிகா கபூரின் அலட்சியத்தால் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்ல பெரும் அரசியல்வாதிகளும் அதிர்ச்சியில் உள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது. பிரபல பின்னணி பாடகி கனிகா கபூர் அவரது அலட்சியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 258 ஆக உயர்வு!

புதுடெல்லி (21 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய…

மேலும்...

கொரோனாவை பயன்படுத்தி ஏமாற்றி பணம் பிடுங்கும் மருந்துக் கடைக்கு சீல்!

புதுக்கோட்டை (21 மார்ச் 2020): புதுக்கோட்டையில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக் கடைக்கு சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் புதுகை மாவட்ட அலுவலர்கள் பலரும் கடந்த சில தினங்களாக களப்பணியாற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ. மீனாட்சிசுந்தரம், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினர் நகரின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில்…

மேலும்...

எனக்கு எப்படி கொரோனா வந்தது? – இந்தியாவில் கொரோனா பாதித்தவரின் அனுபவம் -வீடியோ!

திருவனந்தபுரம் (20 மார்ச் 2020): கத்தாரிலிருந்து கேரளா வந்த இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைப் பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ்…

மேலும்...

பிரபல பின்னணி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – பீதியில் 96 எம்பிக்கள்

புதுடெல்லி (20 மார்ச் 2020): பிரபல இந்தி பின்னணி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதை அடுத்து இந்தி திரையுலகத்தினர் மட்டுமின்றி எம்.பிக்கள் எம்.எல்.ஏக்களும் பீதியடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் பிரபல இந்தி பிண்ணனி பாடகி கனிகா கபூருக்கும் கொரோனா பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது….

மேலும்...