உ.பி.யில் கொடூரம் – 19 வயது தலித் பெண் வன்புணர்ந்து கொலை!

புதுடெல்லி (29 செப் 2020): உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் பகுதியில், சண்ட்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் பெண், கடந்த 14-ம் தேதி, அதே கிராமத்தை கிராமத்தை சேர்ந்த 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாக்கு துண்டிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மேல்…

மேலும்...

உத்திரபிரதேசத்தை உலுக்கும் தாதாக்கள்: ஸ்பெஷல் ஸ்டோரி!

இரு வாரங்களுக்கு முன்னர் கான்பூர் . தேசிய நெடுஞ்சாலையில் சவ்பேபூரை சார்ந்த தாதாவும் அரசியல்வாதியுமான விகாஸ் துபே உத்திரபிரதேச காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டது தலைப்பு செய்தியனாது. எல்லா என்கவுண்டர்களை போலவே இங்கும் குற்றவாளி காவலர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து காவலர்களை சுட முயன்ற போது ‘வேறு வழியின்றி’ சுட்டு கொல்லப்பட்டார். விகாஸ் துபேவுக்கு உதவியதாக சொல்லப்படும் துணை இன்ஸ்பெக்டர் கே.கே.ஷர்மா தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்று பயந்து உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டி இருக்கிறார். என்கவுண்டர்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பரிதாபம் – இறந்த கொரோனா நோயாளியின் இறுதிச் சடங்கில் அஜாக்கிரதை!

காசியாபாத் (18 ஜூன் 2020): உத்திர பிரதேசம் காசியாபாத்தில் கொரோனா வைரஸால் இறந்த ஒரு நபரின் உடல், தகனத்தின் போது மின்சார தகனம் செயலிழந்த்தால் உடல் பாதி எரிந்து அநாதையாக கிடந்துள்ளது. 58 வயதான தொழிலதிபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் காசியாபாத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய திங்கள் கிழமை காலை 11 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்படும்போது நடுப்பகுதியில் தகனம் செய்யும் எந்திரம் வேலை செய்யவில்லை….

மேலும்...

கொடூரத்தின் உச்சத்தை தொட்ட அரசு அதிகாரிகள் – உ.பி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

லக்னோ (14 ஜூன் 2020): உயிரிழந்த சடலத்தை குப்பை வண்டியில் ஏற்றும் சம்பவம் தொடர்பாக உபி அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசம், பல்ராம்பூர் மாவட்டம் உத்ராவுலா நகரில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தின் முன் 42 வயதுடைய ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருக்கு கொரோனா வந்திருக்குமோ என அஞ்சி அவரின் உடலை குப்பை அள்ளும் வண்டியில் குப்பைபோடு குப்பையாக நகராட்சி ஊழியர்கள் 4 பேர் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் 3…

மேலும்...

ஆசிரியர் தேர்வில் முறைகேடு – குடியரசுத் தலைவர் பெயர் தெரியாதவர் அதிக மதிப்பெண் எடுத்த அதிசயம்!

லக்னோ (10 ஜூன் 2020): உபியில் உதவி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்தது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 69,000 உதவி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வில், ராகுல் என்ற விண்ணப்பதாரர், தன்னை பணியில் சேர்ப்பதாகக் கூறி சிலர் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக பிரயாக்ராஜ் போலீஸ் விசாரணை மேற்கொண்டு கே.எல்.படேல் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தத் தேர்வில் 95…

மேலும்...

தலித் வாலிபர் சுட்டுக் கொலை – உயர் ஜாதி இளைஞர்களின் வெறிச்செயல்!

லக்னோ (08 ஜூன் 2020): உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் சனிக்கிழமை தலித் வாலிபரை சில இளைஞர்கள் சுட்டுக் கொன்றனர். டோம்கேடா கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இரவு 17 வயது விகாஸ் ஜாதவின் வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை பிரகாஷ் ஜாதவ் கூற்றுப்படி, “அவர் (மார்ச் 31 அன்று இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு) ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயர் சாதி கிராம இளைஞர்களுடன் வாக்குவாதத்தில்…

மேலும்...

கிராமத்தில் நுழைந்த போலீஸ் முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – வீடியோ!

ஷாம்லி (31 மே 2020): உத்திர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் கிராமத்தில் நுழைந்த போலீஸார் பெண்கள் உட்பட பலர் மீது கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தின் தப்ரானா கிராமத்தில் மாட்டை கொலை செய்த வழக்கில் அப்சல் என்பவரை கைது செய்யச் சென்ற போலீசாருக்கும் கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்தே கிராம மக்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கிராம மக்கள் கூறுகையில், போலீசார் திட்டமிட்டே கிராம மக்கள்…

மேலும்...

முத்தலாக் சட்டம் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு விலக்கா? – குமுறும் பாதிக்கப்பட்ட குடும்பம்!

லக்னோ(14 மே 2020): உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவாகன்ச் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவருக்கு, அலிகாரின் பான் வாலி கோட்டியை சேர்ந்த ரபத் ஜெஹான் என்பவருடன் ஜனவரி 8, 2013-இல் திருமணம்நடைபெற்றுள்ளது. தற்போது நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் தனக்கு விலை உயர்ந்த கார் மற்றும் ரூ. 10 லட்சம்வரதட்சணையாக கேட்டு, ரபத் ஜெஹானைத் துன்புறுத்தி வந்த அப்துல் ரஹீம், கடந்த 2018 நவம்பரில் 10-இல் திடீரென முத்தலாக் கூறிவிவாகரத்து செய்துள்ளார். ரபத் ஜெஹான்,…

மேலும்...

முஸ்லிம்களிடம் எவரும் காய்கறி வாங்குவதில்லை – முஸ்லிம் வியாபாரிகள் புகார்!

லக்னோ (15 ஏப் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று இந்துக்கள் அறிவித்துள்ளதாக முஸ்லிம் வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் மொஹோபா பகுதியில் இரு முஸ்லிம் வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், “எங்கள் பகுதியில் சிலர் தப்லீக் ஜமாத் மக்கள் இருப்பதால், எங்களிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று அப்பகுதி இந்துக்கள் அறிவித்துள்ளதால் எங்களுக்கு காய்கறி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று புகார் அளித்துள்ளனர்….

மேலும்...

விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார் கைது – ஆசிரமத்திற்கு சீல்!

லக்னோ (26 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் இந்த தொற்றுநோய் சமூக பரவலாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு….

மேலும்...