மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதால் ஆவேசமடைந்த புதுமணப் பெண் – தடை பட்ட திருமணம்!

லக்னோ (15 டிச 2020): மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை நடன மாட இழுத்துச் சென்றதால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. உத்திர பிரதேசம் பரேலியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணை மணமகனின் நண்பர்கள் நடனமாட இழுத்துச் சென்றன. இதனால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் அவரது வீட்டுக்கு திரும்பி செல்ல முடிவெடுத்தார். மணமகளை சமாதானம் செய்ய இரு தரப்பினரும் முயன்றனர். எனினும் மணமகள் செவிசாய்க்கவில்லை. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக…

மேலும்...

மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

லக்னோ (28 நவ 2020): மதமாற்ற அவசர தடை சட்டத்திற்கு உத்திர பிரதேச ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…

மேலும்...

லவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

லக்னோ (24 நவ 2020): வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் மனித உரிமையில் அரசு தலையிட முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லவ் ஜிஹாத் குற்றச்சாட்டுக்கு எதிராக சல்மத் அன்சாரி மற்றும் பிரியங்கா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. இருவேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிஹாத் என்ற பெயரில் திசை திரும்பும் வேலையை பாஜக தலைமையிலான உபி அரசு செய்து வருகிறது. திருமணத்திற்காக மதம் மாறுவதையும் உபி…

மேலும்...

மாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்!

லக்னோ (28 அக் 2020): மாடுகளை வெட்டுவோர் சிறை செல்வதில் எந்தவித மாற்றமுமில்லை என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பசுவதை சட்டம் தவறாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் உபியில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலின் ஒரு பகுதியாக பிரச்சார பேரணியில் கலந்து கொண்டபோது யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக பசுவதை சட்டம் தொடர்பாக கைது செய்யப்பட ரஹீமுத்தின் வழக்கின் விசாரணையில் பசு…

மேலும்...

ஹத்ராஸ் வழக்கை விசாரித்து வந்த ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை!

லக்னோ (25 அக் 2020): ஹத்ராஸ் கூட்டு வன்புணர்வு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் வழக்கை விசாரித்து வந்த மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த டி.ஐ.ஜி சந்திர பிரகாஷின் மனைவி புஷ்பா பிரகாஷ். அவருக்கு வயது 36. இவர் லக்னோவின் கோல்ஃப் சிட்டி பகுதியில் புஷ்பா தனது அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய…

மேலும்...

தாடி வளர்த்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்!

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தாடி வளர்த்ததற்காக முஸ்லிம் போலீஸ் அதிகாரி இந்திஸார் அலி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆடைக் குறியீட்டை மீறியதாகவும், தனது மேலதிகாரிகளின் அனுமதியின்றி தாடியை வளர்த்ததாகவும் ஒரு இந்திஸார் அளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராம்லா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரான இவர்,, கடந்த ஒரு வருடமாக தாடியை வளர்ப்பதற்கான அனுமதி கோரியிருந்தார் ஆனால் அதற்கான எந்த அனுமதியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தாடி வளர்த்தபோதும் அவருக்கு எச்சரிக்கை…

மேலும்...

நவராத்திரி விழாவில் பயங்கரம் – 19 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு!

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமையின் ஒரு பகுதியாக 19 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளர். புதன்கிழமை இரவு உத்தரப்பிரதேச மஹோபா மாவட்டத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களுக்குப் பிறகு வீடு திரும்பும் வழியில் சிறுமி மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை தனது வீட்டின் பின்புறம் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்….

மேலும்...

உத்திர பிரதேசத்தில் அரங்கேறிய அடுத்த கொடூரம் – 5 வயது சிறுமியையும் விட்டு வைக்காத காம கொடூரர்கள்!

லக்னோ (11 அக் 2020): உத்திர பிரதேசத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின்னரும் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஹர்டோய் மாவட்டத்தில் 5 வயது…

மேலும்...

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான பெண் மீது அவதூறு பரப்பும் பாஜகவினர்!

லக்னோ(08 அக் 2020):உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, ரவி, ராம்குமார், சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது…

மேலும்...

அதிர்ச்சி சம்பவம் – உத்திர பிரதேசத்தில் மாணவரை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்!

காசியாபாத் (05 அக் 2020): உத்திர பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவரை 10 ஆம் வகுப்பு மாணவர்கள் நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒரு அதே பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். 17 வயதான அந்த மாணவர் மாணவியை சந்திக்க தனது 2 நண்பர்களுடன் காரில் சென்று உள்ளார். அவர்களை பின்தொடர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் 12 ம் வகுப்பு…

மேலும்...