பாகிஸ்தானில் இரண்டு இந்திய உயர் அதிகாரிகள் மிஸ்ஸிங்!

இஸ்லாமாபாத் (15 ஜூன் 2020): இஸ்லாமாபாத்தில் இரண்டு இந்திய உயர் அதிகாரிகளை காணவில்லை என்று செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ திங்களன்று தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் விசா பிரிவில் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் உள்ள பல உயர்மட்ட இந்திய தூதரக அதிகாரிளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தித்தும், அதிகப்படியான கண்காணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

அரபு நாடுகளில் வசிக்கும் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? – குமுறும் தமிழர்கள்!

சென்னை (15 ஜூன் 2020): அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களை மீட்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் மெத்தனம் காட்டி வருவதாக அங்கு வசிக்கும் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகமெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் வெளி நாடுகளிலிருந்து ஊருக்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இந்திய அரசு கொண்டு வந்துள்ள வந்தே பாரத் திட்டத்தின் விமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது….

மேலும்...

வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு!

புதுடெல்லி (14 ஜூன் 2020): இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் விரைவில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தங்கியிருந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது, விசா நடைமுறையை மீறியதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருவதல் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது தனிமைப்படுத்தல் காலங்களும் முடிவடைந்தன. இந்நிலையில் வெளிநாட்டு ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு…

மேலும்...

அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

புதுடெல்லி (13 ஜூன் 2020): அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது முறையாகாது என்றும் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர்…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 11,458 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (13 ஜூன் 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 386 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…

மேலும்...

கொரோனா வைரஸ் – இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி!

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்தியா கடந்த 1ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10 ஆயிரம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை சந்தித்து வருகிறது….

மேலும்...

இந்திய சிறுபான்மையினரின் நிலை குறித்து அமெரிக்க மத சுதந்திர அமைப்பு கவலை!

நியூயார்க் (10 ஜூன் 2020): இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் அவர்களிடம் காட்டப்படும் பாகுபாடுகள் ஆகியனவற்றைக் கவனத்தில் கொண்டு, அச்சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க மத சுதந்திர அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வலியுறுத்தியுள்ளது. எதிர்கட்சித் தலைவர்கள், பல்வேறு மதத்தவர்கள் ஆகியோரை மதிப்பது, மத ஆர்வலர்களுடனும், மதத் தலைவர்களுடனும் சகிப்புத்தன்மையையும் பரஸ்பர மரியாதையையும் வளர்த்துக் கொள்வது ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை, அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் இந்தியப் பிரிவு, ஆளுங்கட்சிக்கு அடிக்கோடிட்டுக்…

மேலும்...

ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் கைது!

புதுடெல்லி (09 ஜூன் 2020): ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகளை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 29 வயதான விகாஸ் குமார் மற்றும் 22 வயதான சிமன் லால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதான இருவரில் விகாஸ் குமார் ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் முழுநேர பணியாளராகவும், சிமன் லால் பிகானீரில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் மையத்தில் ஒப்பந்த பணியாளராகவும் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது மேலும் பாகிஸ்தானின் முல்தானில் இருந்து இயங்கும்…

மேலும்...

இந்திய சீன ராணுவங்கள் எல்லையின் சில பகுதிகளிலிருந்து பின்வாங்கியது!

லடாக் (09 ஜூன் 2020): இந்தியா-சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வந்த நிலையில், அங்கு பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக, இதற்க்கு முன்னே இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை “மால்டோ” என்ற இடத்தில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்று இருநாட்டு…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு செவ்வாய்க்கிழமை நிலவரம்!

புதுடெல்லி (09 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடந்து அதிகரித்தவண்ணமே உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் 9,987 அதிகரித்து 2,66,598 ஐ எட்டியுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 266 அதிகரித்து 7,466 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார விவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...