ஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

சென்னை (27 மே 2020): மீண்டும் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 14.2.2020 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த “2020-2021 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை” மற்றும் அதன் “மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள்” எல்லாம் உருவிழந்து, “கொரோனா பேரிடரால்” – அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மிகப் பெரும் பின்னடைவுகளால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய…

மேலும்...

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (25 மே 2020): அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நேற்றிரவு சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.. ஆஞ்சியோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. டாக்டர்கள் அவருக்கு தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டனர். நேற்றிரவு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவமனைக்குச் சென்று துணை முதல்வரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.. ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ள…

மேலும்...

அதிமுக செயல்பாடு குறித்து ஜி.கே.வாசன் பரபரப்பு அறிக்கை!

சென்னை (24 மே 2020): தமிழக அரசு இப்போதைய அசாதாரண சூழலில் மக்களுக்காக ஆற்றி வரும் பணிகளுக்கு இடையில் எதிர்கட்சியினர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் எடுபடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தி.மு.க அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி M.P. பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை…

மேலும்...

அதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

ஊழல் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த அவர் திமுக ஊழல் குறித்து பேச எந்தவகையிலும் அருகதை இல்லாத கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்...

அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் நாடார் சமூகம்!

சென்னை (24 மே 2020): அதிமுகவில் முதல்வர் எடப்பாடியின் நாடார் எதிர்ப்பு கொள்கை நாடார் சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவது குறித்தும் பெரிய மாவட்டங்களை பிரிப்பது பற்றியும் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து கடந்த மாதம் பறிக்கப்பட்ட விருதுநகர் மா.செ. பதவி, புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அதிமுக நிர்வாக பதவிகள் ஆகியவைகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை பிரித்து ஒரு மாவட்டத்துக்கு…

மேலும்...

அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? – திருமாவளவன் கடும் கண்டனம்

சென்னை (23 மே 2020): திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி கைது செய்யப் பட்டிருப்பதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழக அரசு கைது செய்திருக்கிறது. தலித் மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப் போலவும், தலித் மக்களை யார் சீண்டினாலும் இழிவு படுத்தினாலும் வேடிக்கைப் பார்க்க மாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போம்…

மேலும்...

குற்றவாளிகளை தூக்கிலிட இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? – கொதிக்கும் நெட்டிசன்கள்!

விழுப்புரம் (12 மே 2020): சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொன்றவர்களை தூக்கிலிட சிறுமியின் மரண வாக்குமூலமே போதுமானது என்று பொதுவான கருத்து நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத்…

மேலும்...

சிறுமி மரணம் இதயமுள்ள எவரையும் துடிக்கச் செய்யும் – ஸ்டாலின் அறிக்கை!

சென்னை (11 மே 2020): சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி…

மேலும்...

சிறுமியை தீ வைத்து கொளுத்த காரணம் இதுதான்: பகீர் கிளப்பும் திருமாவளவன்!

சென்னை (11 மே 2020): விழுப்புரம் அருகே சிறுமி ஜெயஸ்ரீ தீ வைத்து கொல்லப்பட டாஸ்மாக் கடைகளைத் திறந்ததும் ஒரு காரணம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்னும் சிறுமியை, அதே ஊரைச்சார்ந்த கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைகளைக் கட்டிப்போட்டு, வாயில் துணியைத் திணித்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். உடல்முழுவதும் எரிந்தநிலையில்…

மேலும்...

அதிமுகவினரின் கொடூரச் செயல் – 15 வயது சிறுமி எரித்துப் படுகொலை!

விழுப்புரம் (11 மே 2020): விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 15 வயது சிறுமி ஒருவர், அ.தி.மு.க.வினர் இருவரால் எரித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் தரப்பினருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் வீட்டிற்கு நேற்று கலியபெருமாள் மற்றும் முருகன்…

மேலும்...