விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல்!

புதுடெல்லி(22 ஆக 2022): டெல்லி ஜந்தர் மாந்தரில் விவசாயிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து விவசாயிகள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விட்டுத்தனர். இதனையொட்டி டெல்லியின் எல்லைகளில், குறிப்பாக காஜிபூரில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். எனினும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் விவசாயிகள் திங்களன்று டெல்லி ஜந்தர் மந்தரை அடையத் தொடங்கியுள்ளனர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) மற்றும்…

மேலும்...

ஐந்து மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை – விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்!

புதுடெல்லி (16 ஜன 2022): உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூட்டு கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. டெல்லி எல்லையில் போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், கூட்டு கிசான் மோர்ச்சா மற்றொரு போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும்…

மேலும்...

முடிவுக்கு வந்த விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (09 டிச 2021): விவசாய சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக டில்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. ஆனாலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தைத் தொடர கூட்டு கிசான் மோர்ச்சா முடிவு!

புதுடெல்லி (04 டிச 2021): மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் வாபஸ் மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்நிலையில் முக்கிய கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், டெல்லி எல்லையில் முற்றுகையைத் தொடர்வதில் அமைப்புகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தொடர்வது என்றும் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி விவசாயிகள் அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நடந்த விவசாயிகள்…

மேலும்...

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முடிவு!

புதுடெல்லி (09 நவ 2021): இம்மாதம் 26ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். இம்மாதம் 26ம் தேதி மாநில அளவிலான விவசாயிகள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்தில். பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். நவம்பர் 28-ம் தேதி மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் கிசான்-மஸ்தூர் மகாபஞ்சாயத் நடைபெறும்.நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும். இன்று கூடிய கூட்டு கிசான்…

மேலும்...

உத்திர பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் பலி!

லக்னோ (04 அக் 2021): உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பத்து மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூர் மாவட்டத்திலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலுள்ள பன்வீர்பூர்…

மேலும்...

பஞ்சாப் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளிய நோட்டா – பரபரப்பில் அமித் ஷா!

புதுடெல்லி (18 பிப் 2021) : பஞ்சாப் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து பாஜக உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உ.பி.யின் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் கலந்து கொண்டனர். பஞ்சாபின் பல பகுதிகளில், பாஜக…

மேலும்...

மத்திய அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு – டெண்டுல்கர் மீது விசாரணைக்கு சிவசேனா அரசு உத்தரவு!

மும்பை (08 பிப் 2021): மத்திய அரசுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும் ட்விட்டரில் பதிவிட்ட பிரபலங்களின் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த மகாரஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல்…

மேலும்...

இந்தியாவில் ட்விட்டருக்கு தடை வருமா?

புதுடெல்லி (08 பிப் 2021): இந்திய அரசின் கோரிக்கைக்கு ட்வீட்டர் சமூக வலைத்தளம் இதுவரை பதிலளிக்காததால் ட்வீட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும் என தெரிகிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 1,000 க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்குமாறு ட்விட்டரை மத்திய அரசாங்கம் கேட்டுள்ளது. நீக்கக் கோரப்பட்ட 1178 ட்விட்டர் கணக்குகள் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் கணக்குகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் வேலைநிறுத்தம் குறித்து தவறான மற்றும் ஆத்திரமூட்டும் செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை…

மேலும்...

டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் ஆகியோர் புகழ் மங்கிவிட்டது – ராஜ் தாக்கரே விமர்சனம்!

மும்பை (07 பிப் 2021): லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் புகழ் மங்கிவிட்டதாக மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,” விவசாய பிரச்சினை அரசாங்கத்தின் ஒரு விஷயம். இதற்கும் நாட்டு பற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று தாக்கரே கூறியுள்ளார். நாட்டின் முன்னணி விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் அரசாங்க சார்பு ட்வீட்டுகள் பல விமர்சனங்களை ஈர்த்துள்ளன. இந்நிலையில் ராஜ்தாக்கரே இவ்வாறு தெரிவித்துள்ளார். அக்‌ஷய் குமார் போன்றவர்கள்…

மேலும்...