பண்டிகை காலங்களில் கவனமாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

புதுடெல்லி (25 அக் 2020): பிரதமர் மோடி மண் கி பாத் உரையின்போது, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், “விஜயதசமி திருநாளில் அனைவருக்கும் எனது மன மார்ந்த வாழ்த்துக்கள். பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும். கொரோனா காலத்திலும் காதி துணிகளின் விற்பனை அதிகரித்துள்ளது….

மேலும்...

இந்தியா அசுத்தமான நாடு – ட்ரம்ப் கடும் விமர்சனம் : பிரதமர் மோடி அமைதி!

வாஷிங்டன் (23 அக் 2020): இந்தியா அசுத்தமான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...

நீக்கப்பட்ட மோடியின் யூட்டூப் சேனல் டிஸ்லைக் பட்டன்!

புதுடெல்லி (21 அக் 2020): சமீபத்தில் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் யூடூப் டிஸ்லைக் பட்டன் நீக்கப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்கள் நெடுந்தூரம் பயணித்துள்ளனர். பொதுமுடக்கம்தான் போயிருக்கிறதே தவிர வைரஸ் இன்னும் போகவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த 7-8 மாதங்களாக இந்தியர்களின் முயற்சியால் இந்தியா தற்போது நிலையாக இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளும் படிப்படியாக வேகமாக வளர்ந்து வருகின்றன. நமது பொறுப்புகளுக்காக இப்போது நம்மில் பலரும் வீட்டை விட்டு…

மேலும்...

முத்தலாக் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

புதுடெல்லி (12 அக் 2020): முத்தலாக் தடை சட்டம் இயற்றியதனால் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற ராஜமாதா சிந்தியாவின் பார்வையை நாடு முன்னெடுத்து சென்றுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார் ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவின் தாயார் மற்றும் மூத்த அரசியல்வாதியான ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு அவரது நினைவாக மத்திய அரசு சார்பில் ரூ.100 நாணயம் வெளியிட முடிவானது. இதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தினால் இந்த சிறப்பு…

மேலும்...

விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு!

சென்னை (20 செப் 2020): சென்னையில் விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விவசாய அணி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுகணக்கான பாஜகவினர் அங்கு திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சி நேரத்தில் வானில் பறக்கவிட கேஸ் பலூன் எனப்படும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வைக்கப்பட்டிருந்தது….

மேலும்...

சேவை தொடரட்டும் – மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (17 செப் 2020): இன்று பிறந்த நாள் காணும் பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டால்ன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு…

மேலும்...

பி.எம்.கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களின் பங்கு? – ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

சென்னை (19 ஆக 2020): கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பிஎம் கேர்எஸ் நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கூறியிருப்பதாவது: “பிஎம் கேர்ஸ் நிதியின் சட்டப்பூர்வத்தையும், சட்டப்பொறுப்பு குறித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது. ஆனால், அறிவார்ந்தவர்கள், கல்விவட்டாரங்களில் பிஎம் கேர்ஸ் குறித்த பல்வேறு கேள்விகள் நீண்டகாலத்துக்கு எழுப்பப்படும். ஏனென்றால், பிஎம் கேர்ஸ் நிதியின்…

மேலும்...
Rahul and Modi

முதலில் பொய்க் குப்பைகளை சுத்தப்படுத்துங்கள்!-மோடி மீது ராகுல் காட்டம்

புதுதில்லி (12 ஆக 2020):குப்பைகள் இல்லா தேசம் என்ற பிரதமரின் சுதந்திர தினத் திட்டத்தை விமர்சித்துள்ள ராகுல் காந்தி முதலில் பொய் குப்பைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் பிரதேசத்தின் 74-ஆவது சுதந்தர தினம் நெருங்கி வரும் வேளையில், தற்போதைய நெருக்கடியான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பான முறையில் சுதந்தர தினத்தைக் கொண்டாட மிக நேர்தியான வகையில் ஏற்பாடுகள் செய்ய அந்தந்த மாநிய அரசுகள் முயன்று வருகின்றன. இதற்கிடையே…

மேலும்...
Modi-Shivsena

மக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை

மும்பை (09 ஆக 2020):உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய கடுமையான பாதிப்புக்களினால், பல நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க மறுபுறம் பொருளாதார பாதிப்பு, வேலையின்மை அதிகரிப்பு என மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இந்நிலை மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மக்கள் பலரும் தமது வேலைகளை இழந்து அன்றாட வாழ்க்கையைக்கூட நடத்த முடியாத அளவுக்கு ஒருவேளை சோற்றுக்குக் கூட கஷ்டப்பட்டு வரும் நிலைமைகளும் உருவாகி வருகின்றன. வைரஸ்…

மேலும்...
Manoj Sinha

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரானார் மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா!

சிறீநகர் (05 ஆக 2020): மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா எனும் தகுதியுடன், பிரிவு 370 நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் மனோஜ் சின்ஹா என்பவர்..! உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்தான் மனோஜ் சின்ஹா. ஆனால் பா.ஜ.க.-வின் வேறு திட்டங்கள் மூலம் யோகிக்கு அந்த ஜாக்பாட் அடித்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-ஆவது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு, மாநிலமும் ஜம்மு காஷ்மீர்,…

மேலும்...