இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர் – பிரதமருக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

புதுடெல்லி (20 ஜூன் 2020): சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், “20 இந்திய வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீனா இடையே கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, மத்திய பா.ஜ.க. அரசு மீது திரு. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா திட்டமிட்டே தாக்‍குதல்…

மேலும்...

சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை – பிரதமர் மோடி!

புதுடெல்லி (19 ஜூன் 2020): இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்று அனைத்துக் கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய- சீன ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீன…

மேலும்...

இந்திய சீன எல்லையில் வீரர்கள் சாவு – பிரதமர் மவுனம் ஏன்?: ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (17 ஜூன் 2020): லடாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. அதனை அடுத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த…

மேலும்...

அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

புதுடெல்லி (13 ஜூன் 2020): அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது முறையாகாது என்றும் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர்…

மேலும்...

உலக நன்மைக்காக இந்தியா- ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற வேண்டும் – பிரதமர் மோடி!

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் ஆலோசனை நடத்தினார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் உலகின் ஒவ்வொரு பகுதிகளையும் பாதித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என்றார். மேலும், ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா உறவு மிகவும்…

மேலும்...

நிர்மலா சீதாராமன் நீக்கம்? – மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?

புதுடெல்லி (31 மே 2020): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை நீக்கிவிட்டு தேசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்த கே.வி.காமத், புதிய நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாரமன் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை அவரால் சரிவர சரிசெய்ய முடியவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில் பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய…

மேலும்...

நாட்டு மக்களுக்கு மோடியின் கடிதம் சொல்வது என்ன?

புதுடெல்லி (30 மே 2020): நாடு முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.65 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இந்த நெருக்கடியான காலகட்டத்தில் யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை என கூறிவிட முடியாது. நம் நாட்டின் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு,குறு உற்பத்தியாளர்கள், கைவினைகலைஞர்கள், வணிகர்கள் என சக இந்தியர்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.“ இந்த நெருக்கடிகள் பேரழிவுகளாக மாறாமல்…

மேலும்...

செளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன்? – சீமான் அதிரடி கேள்வி!

சென்னை (28 மே 2020): எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் செளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன் கொரோனா பயமா? என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே…

மேலும்...

மத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது – பிணராயி விஜயன் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம் (27 மே 2020): மத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது கட்டுப்படுத்த நினைக்கவில்லை என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள பிணராயி விஜயன் கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதில் மத்திய அரசின் அவசர நடவடிக்கைகளால் கொரோனா தடுப்பு நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம்…

மேலும்...

போருக்கு தயாராகும் இந்தியா? – பிரமர் முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி (27 மே 2020): இந்தியா சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் இதேபோல் சீனாவின் ராணுவ தலைவர்கள் உடன் ஆலோசனை செய்தார். சிஎம்சி மற்றும் பிஎல்ஏ என்ற இரண்டு முக்கியமான ராணுவ படைகள் உடன் ஜி ஜிங்பிங் ஆலோசனை செய்தார். அப்போது சீன நாட்டு வீரர்கள் போருக்கு தயார்…

மேலும்...