காங்கிரஸ் கடசியின் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

சென்னை (10 ஜூன் 2020): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மாநிலத் தலைவருமான ஜி.காளான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று பிற்பகல் காலமானார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழக தலைவர் திரு ஜி.காளான் அவர்கள் காலமான செய்திகேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரான இவர் பதினாறு ஆண்டுகள் தமிழக ஐ.என்.டி.யு.சி.யின் தலைவராக செயல்பட்டு…

மேலும்...

கொரோனா பாதிப்பால் பிரபல நடிகர் மரணம்!

ஷார்ஜா (09 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவை சேர்ந்த நடிகர் எஸ்.ஏ.ஹாசன் ஷார்ஜாவில் உயிரிழந்துள்ளார். துபாயில் டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டு வரும் எஸ்.ஏ.ஹாசன், கேரள மாநிலம் ஆலுவா அருகில் உள்ள சங்கரன்குழியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ”ஹலோ துபாய்க்காரன்” என்ற மலையாள படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சார்ஜாவின் ரஸ் அல் ஹைமா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக…

மேலும்...

நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பால் மரணம்!

பெங்களூரு (09 ஜூன் 2020): பிரபல கன்னட இளம் நடிகர் சிரஞ்சீவி சஜ்ரா மாரடைப்பால் உயிரிழந்தர். நடிகர் சிரஞ்சீவி (39) இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்து நிலையில் , திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பெங்களூரில் நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பிரபலங்கள்…

மேலும்...

காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருந்தால் யானை கொல்லப்பட்டதா? – வனத்துறையினர் விசாரணை!

திருவனந்தபுரம் (04 ஜூன் 2020): கேரளாவில் காடுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருதால் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதா? என்று கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கேரள வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் குறிப்பிடத்தக்க முக்கிய விபரங்கள் ஏதும் புலப்படவில்லை. ஏனெனில், யானைக்கு காயம்பட்டு 2 வாரங்களுக்கு பின்னரே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானையை தான்…

மேலும்...

தமிழக பாஜக முன்னாள் தலைவர் மரணம்!

சேலம் (02 ஜூன் 2020): தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (92) உடல் நலக்குறைவால் காலமானார். கே.என் லட்சுமணன். 2 முறை தமிழக பாஜ தலைவராக இருந்தார். 2001 சட்டப்பேரவை தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு காலமானார். கே.என்.லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக…

மேலும்...

இறந்த தாயை எழுப்பும் குழந்தை – வைரலான குழந்தைக்கு உதவும் ஷாரூக்கான் அறக்கட்டளை!

மும்பை (01 ஜூன் 2020): பீகார் முசாபர்பூர் ரயில்வே சேஷனில் இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில் அந்த குழந்தைக்கு உதவ நடிகர் ஷாருக்கானின் ‘மீர் அறக்கட்டளை’ முன்வந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதில் மிகவும் அவதிபட்டனர். பலர் கால்நடையாக நடந்தே ஊருக்கு சென்றனர். இதில் பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். அந்த வகையில் தாமதமாக அரசு அறிவித்த…

மேலும்...

அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் – காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு!

நியூயார்க் (30 மே 2020): கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்ததை அடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கடந்த 25-ம் தேதி மின்னபொலிஸ் போலீஸ் கைது செய்யும்போது உயிரிழந்தார். ஆயுதங்களின்றி தரையில் கிடந்த ஜார்ஜின் கழுத்தில் போலீஸ் டெரிக் சவின் என்பவர் மண்டியிட்டதாலேயே ஜார்ஜ் உயிரிழந்தாக கூறி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள், வங்கிகள், உணவகங்கள், காவல்நிலையம் என பல இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்….

மேலும்...

எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

சென்னை (30 மே 2020): எழுத்தாளரும் தமிழறிஞருமான தமிழ் மாமணி அதிரை அஹமது அவர்கள் இன்று காலை காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் இன்று மரணமடைந்தார்கள் என்ற செய்தி கடும் துயரத்தை அளித்ததது. தலைசிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்த அஹ்மது அவர்கள் வேலூர் பாக்கியத்துஸ் சாலிஹாத் அரபிக்…

மேலும்...

தொடரும் அதிர்ச்சி – ரெயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் இறந்த உடல் கண்டெடுப்பு!

ஜஹான்சி (29 மே 2020): உத்திர பிரதேசத்தில் இரயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. நடந்தே பலர் அவரவர்களின் ஊர்களுக்கு சென்றதால் உணவு இல்லாமை, களைப்பு காரணமாக பலர் வழியிலேயே உயிரிழந்தனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. மும்பையிலிருந்து உத்திர பிரதேசத்திற்கு ரெயிலில்…

மேலும்...

தொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

ஐதராபாத் (28 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்திய கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க அரசோ, மாவட்ட நிர்வாகங்களோ எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் மடாக் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் புதன்கிழமை இரவு 3 வயது குழந்தை சாய் வரதன் 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்….

மேலும்...