அடுத்த அதிர்ச்சி – தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 44 பேர் மரணம்!

Share this News:

சென்னை (15 ஜூன் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் திங்கள்கிழமை மட்டும் 44 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அதி வேகத்தில் பரவி வருகிறது. இன்று புதிதாக 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 – ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,244 – ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பால் திங்கள்கிழமை மட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 44 பேரையும் சேர்த்து, மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் தமிழகத்தில் மீண்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.


Share this News: