Vinayagar Chathurthi

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை! தமிழக அரசு அதிரடி!

சென்னை (13 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைப்பது, அதற்காக விழா எடுப்பது மற்றும் கடலில் கரைக்கும் வைபவம் ஆகிய அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதித்துள்ளது. கொரோனா நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் விநாயகர்…

மேலும்...

பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை

இஸ்லாமாபாத் (01 ஜூலை 2020): அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பிறகு நடைபெற்ற விசாரணையில் ஏறத்தாழ 250 விமானிகள் மோசடி செய்து தேர்வில் வெற்றி பெற்று விமானிகளாக பணி செய்வதாக தெரியவந்தது இந்த விமானிகளில் பலர் சர்வதேச விமானங்களை இயக்கி வருகின்ற அதிர்ச்சி தகவலும் வெளிப்பட்டடது. இதனையடுத்து வியட்னாம் அரசு பாகிஸ்தான் விமானிகளுக்கு தடை விதித்தது. தற்போது ஐரோப்பிய ஒன்றியமும், பாகிஸ்தான் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்க தடை விதித்துள்ளது. 1.7.2020 தொடங்கியுள்ள இந்த…

மேலும்...

டிக்டாக் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு இந்தியாவில் தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (29 ஜூன் 2020): டிக்டாக் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் கட்டமைப்பு ஆகிவற்றுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்திய மத்திய அரசின் 69A சட்டம் ( Information Technology Act ) மூலமாக இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில்…

மேலும்...

பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு தடை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு மருந்துகள் ஆய்வின் அடிப்படையில் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் ஒருபுறம் கொரோனாவுக்கு நிரந்தர மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இது இப்படியிருக்க யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது….

மேலும்...

ட்ரம்பின் முகத்திரையை கிழிக்கும் புத்தகம் – அமெரிக்க அரசு அவசர தடை!

வாஷிங்டன் (22 ஜூன் 2020): வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் மேதையான ஜான் போல்டன் The Room Where it Happened” எனும் பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஜூன் 23- ஆம் தேதி இந்த புத்தகம் வெளியாக இருந்த நிலையில் நேற்று அந்த புத்தகத்திற்கு அமெரிக்க அரசு திடீரென தடை விதித்தது. அரசின் முக்கிய பதவியில் இருந்தவர் எழுதிய புத்தகம் என்பதால் அதனை தணிக்கை செய்த பின்னரே வெளியிட முடியுமென காரணமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறு தேர்தலில்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரும் துபாய் மீடியா!

துபாய் (08 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக நாளிதழ் கோரிக்கை வைத்துள்ளது. கல்ஃப் நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன் அன்று வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களை தடை விதிக்க…

மேலும்...

சென்னையில் போராட்டங்கள் நடத்த போலீஸ் தடை!

சென்னை (14 மார்ச் 2020): சென்னையில் போராட்டம் நடத்த விதித்து பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் சனிக்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-வது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் இம் மாதம் 29-ஆம் தேதி வரை 15 நாள்கள் விதிக்கப்படுகிறது. அதன்படி, பொது இடங்கள், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித…

மேலும்...

கடும் எதிர்ப்பை அடுத்து ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

புதுடெல்லி (07 மார்ச் 2020): மீடியா ஒன் மற்றும் ஆசியா நெட் நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டத் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை தவறாக சித்தரித்ததாக தகவல் ஒளிபரப்புத்துறை இரண்டு சேனல்களுக்கும் 48 மணி நேர தடை விதித்திருந்தது. இந்நிலையில் இரு சேனல்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சென்னை பத்திரிகையாளர்கள் மன்றமும், ‘கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல்’ என்று கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இரு சேனல்களுக்கும் விதிக்கப்பட்டிருந்தத்…

மேலும்...

இந்தியாவில் இரண்டு செய்தி சேனல்களுக்குத் தடை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): டெல்லி கலவர செய்தியை தவறாக ஒளிபரப்பியதாக மலையாள மொழியின் இரண்டு சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலையாளத்தில் பிரபலமான செய்தி சேனல்கள் ஆசியாநெட் மற்றும் மீடியா ஒன். இவை இரண்டு சேனல்களிலும், ஒளிபரப்பான செய்தி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தவறான செய்திகள் எனப் பட்டியலிட்டுள்ள அமைச்சகம், இதுபற்றிய விளக்கங்களுடன், ஒளிபரப்புக்கு இரு நாள்கள் – வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி…

மேலும்...

ரூ 2000 ரூபாய் செல்லாது என்ற தகவல் வதந்தியே – ரிசர்வ் வங்கி தகவல்!

புதுடெல்லி (23 பிப் 2020): ரூ 2000 ரூபாய் செல்லாது என்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படலாம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே 2000 ரூபாய் நோட்டின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படலாம் என்ற தகவலும் உண்டு. இதனால் மக்கள்…

மேலும்...