ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை!

புதுடெல்லி (07 ஜூன் 2020): நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்‍கப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்‍கப்பட்டது. தற்போது 5-ம் கட்டமாக வரும் 30-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன்…

மேலும்...

கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுமா?

சென்னை (07 ஜூன் 2020): கொரோனா அறிகுறி இருந்தால் அந்த மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆசிரிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை அவசியம் என தெரிவித்துள்ளது. பள்ளி நுழைவாயிலேயே அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு 97 டிகிரி வரை வெப்பநிலை…

மேலும்...

சென்னை கொத்தவால் சாவடி மூடல்!

சென்னை (07 ஜூன் 2020): நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மொத்தம் 1,458 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2…

மேலும்...

கொரோனா மோசமாக பாதித்த உலகின் ஐந்தாவது நாடானது இந்தியா!

புதுடெல்லி (07 ஜூன் 2020): இந்தியா கொரோனா மோசமாக பாதித்த ஐந்தாவது நாடாக மாறியுள்ளது. கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது 2,46,628 நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளுடன், ஐந்தாவது மோசமான நாடாக மாறியுள்ளது, இதன் மூலம் ஸ்பெயினின் எண்ணிக்கையை முந்தியுள்ளது. சமீபத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,929 ஆக உள்ளது. எவ்வாறாயினும், உணவகங்கள், வணிக…

மேலும்...

ஃபீஸ் 10 ரூபாய் போதும் – வாடகையே வேண்டாம்: நெகிழ வைத்த பட்டுக்கோட்டை டாக்டர்!

பட்டுக்கோட்டை (06 ஜூன் 2020): கொரோனா காலத்தில் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவிக்கும் கடை வியாபாரிகளிடம் பட்டுக்கோட்டை டாக்டர் கூறிய வார்த்தை பலரையும் நெகிழ வைத்துள்ளது. பட்டுக்கோட்டையில் டாக்டர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கொரோனா லாக்டெளனால் கடைகள் திறக்காமல் போனதில் வருமானம் இல்லாமல் தவித்ததைக் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர்களிடம் மூன்று மாதவாடகை தர வேண்டாம் எனக் கூறி நெகிழ வைத்திருக்கிறார். பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய தெருவில் கிளினிக்…

மேலும்...

கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானம் – வழியனுப்பிய தமுமுகவினர்!

ஜித்தா (06 ஜூன் 2020): கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் சென்ற 151 தமிழர்களை தமுமுக தன்னார்வலர்கள் வழியனுப்பி வைத்தனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு பகல் 3 மணியளவில் 32 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 151 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. ஜித்தா இந்திய தூதரக அதிகாரிகள் ஹம்னா மரியம் மற்றும் அம்ஜத் ஆகியோர் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சிராஜூதீன், ரமணா மற்றும் ஜித்தா…

மேலும்...

பிரபல தமிழ் நடிகர் மற்றும் நடிகை தற்கொலை!

சென்னை (06 ஜூன் 2020): தமிழ் டிவி நடிகர் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி இருவரும், சென்னையில் உள்ள அவர்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நடிகர்களின் சிதைந்த உடல்கள் சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நடிகர்களின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு புகார் கூறியுள்ளனர். உடனே அங்கு வந்த காவல்துறையினர் உடலை வீட்டிலிருந்து மீட்டு ​​பிரேத பரிசோதனைக்கு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு…

மேலும்...

2020 புனித ஹஜ் பயணம் பற்றிய இந்திய ஹஜ் கமிட்டி முக்கிய அறிவிப்பு

புதுடெல்லி (06 ஜூன் 2020): கொரோனா நோய் தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயண ஏற்பாடுகளை விருப்பமானவர்கள் ரத்து செய்து கொள்ள இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது இவ்வாண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில் சௌதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரையை ரத்து செய்து கொள்ள வழிகாட்டப்பட்டுள்ளது ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்தியவர்கள் தாங்கள்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல் நிலை எப்படி உள்ளது? – மருத்துவமனை தகவல்!

சென்னை (06 ஜூன் 2020): திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை மருத்துவர்…

மேலும்...

ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படும் – முதல்வர் பிணராயி விஜயன் தகவல்!

திருவனந்தபுரம் (05 ஜூன் 2020): கேரள மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 4 கட்ட லாக்டவுனை மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கடைப்பிடித்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்தன. இந்த லாக்டவுன் முடிந்து அதை நீக்கும் முதல் கட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதற்கான…

மேலும்...