துபாயில் கொரோனா வைரஸ் குறித்த வதந்தி – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

துபாய் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் குறித்து வதந்தி கிளப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என துபாய் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் துபாய் குறித்து கரோனா வைரஸ் பாதித்தவர் குறித்த வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது வதந்தி என்று கூறியுள்ள துபாய் போலீஸ் வதந்தி பரப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் கரோனா வைரஸ் பாதித்த சீனாவை சேர்ந்த நான்கு பேர் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அவர்கள் விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் செய்யப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply