வளைகுடா இந்தியர்களின் ஊதிய நிர்ணயத்தை திரும்பப்பெற்றது ஒன்றிய அரசு!

Share this News:

புதுடெல்லி (30 ஜுலை 2021): வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெறுகிறது

வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு குறைத்தது. இது முந்தைய குறைந்தபட்ச ஊதியத்தைவிட 30% முதல் 50% வரையாகும். கோவிட் காரணமாக. வளைகுடாவில் இந்தியர்கள் வேலை இழப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒன்றிய அரசின் முந்தைய இந்த உத்தரவு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வருமானத்தை பாதிக்கும் என்றும், இதனால் நிபுணர்கள், அல்லது உயர் கல்வித் தகுதிகளைப் பெற்றவர்கள் இந்த குறைந்தபட்ச ஊதியத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து இந்த உத்தரவு தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது.

முன்னதாக குறைந்தபட்ச ஊதியக் குறைப்பு உத்தரவை எதிர்த்து தெலுங்கானா மாநில வளைகுடா தொழிலாளர் கூட்டு நடவடிக்கைக் குழு (வளைகுடா ஜேஏசி) உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.குறிப்பிடத்தக்கது..


Share this News:

Leave a Reply