சவூதியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

Share this News:

ரியாத் (21 ஜன 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வியாழன் வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மக்கா மாகாணத்தில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மக்கா கவர்னரேட் ட்வீட் செய்துள்ளது.

மக்கா மாகாணத்தில் அல் குன்ஃபுடா, அல் லைத், அல் அர்டியாத் மற்றும் தாயிப் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல் மஜ்மா, அல் ஜுல்பி, அல் கத், ஷக்ரா, ரமா, அல் தவாத்மி மற்றும் அல் ஜுபைல், ஹஃபர் அல் பாட்டின், கஃப்ஜி, அல் நைரியா மற்றும் ஷர்கியாவில் உள்ள கரியாதுல் உல்லய்யா, அல் காசிமில் அல் பகா, அல் கசாலா மற்றும் அல் ஷனான், புரைடா மற்றும் உனைசா ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஆசிரில் அபாஹா, காமிஸ் முஷைத், அல்நமாஸ், பல்கார்ன், அல் மஜரிதா, மஹைல், பாரிக், தனுமா, அல் பராக்கா, பிஷா, அல்பாஹைல் பல்ஜுரைஷி, அல் மந்தக், அல்குரா, கல்வத், அல் மஹ் வா, அல் அகீக், பானி ஹசன், அல் ஹஜ்ரா ஜிசான், பிஷா., சப் யா, ஃபிஃபா, அல் குபா, அல் அரிதா, அடேர், அல் ஷகீக் மதீனா, கைபர், அல் மஹ்த், வாடி அல் ஃபரா மற்றும் ஹனகியா ஆகிய இடங்களிலும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply